அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கோவிட் 19 நோய் உள்ளதா என்பதை இரண்டு மணி நேரத்திலேயே உறுதிப்படுத்தக் கூடிய பரிசோதனை கருவி - சித்ரா ஜீன் லாம்ப் என்

Posted On: 16 APR 2020 6:51PM by PIB Chennai

கோவிட் 19 தொற்று உள்ளதா என்பதை இரண்டு மணி நேரத்திலேயே உறுதிப்படுத்தக் கூடிய, குறைந்த செலவிலான, கோவிட்19 தொற்று கண்டறியும் பரிசோதனை கருவி ஒன்றை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பான, திருவனந்தபுரத்திலுள்ள ஸ்ரீ சித்திரத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம் தயாரித்துள்ளது.

கோவிட் 19 தொற்று உறுதிப்படுத்துவதற்கான, இந்தப் பரிசோதனை, வைரல் நியூக்ளிக் அமிலத்தில், ரிவர்ஸ் டிரன்ஸ்கிரிப்டேஸ் மீடியா ஆம்பிளிஃபிகேஷன் எனப்படும்,  முறையைப் பயன்படுத்தி சர் கோவ் 2வில் என் மரபணுவைக் கண்டறியும். இது உலகில் முதன் முறையான பரிசோதனை முறை  என்றில்லாவிட்டாலும், முதல் சில பரிசோதனை முறைகளுள் ஒன்றாக இருக்கும்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிதி உதவியுடன் தயாரிக்கப்பட்ட, சித்ரா ஜீன் லாம்ப் என் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பரிசோதனை கருவி , சார்ஸ் கோவ் 2 என் மரபணுவை மிகக் குறிப்பாக கண்டறிய வல்லது. அதுமட்டுமல்லாமல், மரபணுவின் இரண்டு பகுதிகளைக் கண்டறியவல்லது. வைரஸ் மரபணு, அதன் அப்போதைய வேகத்தில், ஒரு பகுதியில் வளர்சிதை மாற்றத்திற்கு உட்பட்டிருந்தாலும், மற்றொரு பகுதியில் அதைக் கண்டறிந்து விட முடியும் என்பதால், இந்தப் பரிசோதனை தோல்வியடையாது என்பதை இதனால் உறுதிப்படுத்த முடியும்.

[மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள: திருமிகு ஸ்வப்னா வாமதேவன், மக்கள் தொடர்பு அலுவலர் அலைபேசி 9656815943, மின்னஞ்சல் Email: pro@sctimst.ac.in]

                                          

****


(Release ID: 1615340) Visitor Counter : 256