ஊரக வளர்ச்சி அமைச்சகம்

மத்திய ஊரக வளர்ச்சி, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர், ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் அனைத்து முதன்மை திட்டங்கள் குறித்து விரிவான பரிசீலனை

Posted On: 16 APR 2020 6:58PM by PIB Chennai

மத்திய ஊரக வளர்ச்சி, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத் துறை அமைச்சர் திரு.நரேந்திர சிங் தோமர், மத்திய ஊரக வளர்ச்சித் துறையின் அனைத்து முதன்மை திட்டங்கள் குறித்தும் இன்று விரிவான சீராய்வு செய்தார்.

2019- 2020 நிதியாண்டில் நிலுவையில் உள்ள ஊதியம் / கூலி மற்றும் இதர பொருட்களுக்கான நிலுவைத் தொகைகளை விநியோகிப்பது மட்டுமல்லாமல் நடப்பு நிதியாண்டின் முதல் 15 நாட்களுக்கான ஊதியத்தை / கூலியை வழங்குவதற்காகவும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் ரூ 7,300 கோடி வழங்கப்பட்டுள்ளது குறித்து          திரு நரேந்திர சிங் தோமர் பாராட்டுத் தெரிவித்தார்

இதுவரை கோவிட்19 தொற்றால் பாதிக்கப்படாத பகுதிகளில் தேவையான அளவு சமூக இடைவெளி மற்றும் பாதுகாப்பான முகக்கவசங்களைப் பயன்படுத்தும் முறைகளுடன், திறமையான வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் விருப்பம் தெரிவித்தார். நீர்ப்பாசன வசதி. நீர் பாதுகாப்பு மற்றும் தண்ணீர் வீணாவதைத் தடுப்பது தொடர்பான நீண்டகால அமைப்புகளை உருவாக்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கிராமப்புற மக்களில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு உதவுவதற்காக பருத்தியினாலான பாதுகாப்பு முகக் கவசங்கள் மற்றும் சுத்திகரிப்பான்கள் தயாரிக்கும் பணி மற்றும் சமுதாய சமையலறை பணிகளில் 93 ஆயிரத்துக்கும் அதிகமான சுய உதவிக் குழு உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் என்பது குறித்து அமைச்சர் திருப்தி தெரிவித்தார்.

APS/SG/PK



(Release ID: 1615339) Visitor Counter : 146