பாதுகாப்பு அமைச்சகம்

பிபிஇ பரிசோதனை வசதியை குவாலியரிலிருந்து தில்லிக்கு டிஆர்டிஓ மாற்றியது

Posted On: 16 APR 2020 4:58PM by PIB Chennai

பிபிஇ எனப்படும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முகக்கவசங்களைத் துரிதமாக விநியோகிப்பதில் ஏற்படும் தாமதத்தைத் தடுக்கும் வகையில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டிஆர்டிஓ, பரிசோதனை வசதியை குவாலியரில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்திலிருந்து (Defence Research Development Establishment - DRDE)  தில்லியில் உள்ள அணு மருத்துவம் மற்றும் உப அறிவியல் நிறுவனத்துக்கு (Institute of Nuclear Medicine & Allied Sciences - INMAS) மாற்றியுள்ளது. இன்மாஸ் என்பது இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ஒரு பிரதானமான வாழ்க்கை அறிவியல் ஆய்வுக்கூடமாகும். பரிசோதனை மற்றும் உடல் பொருத்த மதிப்பீடு, முகக்கவசங்கள்  ஆகிய வசதிகளுடன் இன்மாஸ் செயல்பட்டு வருகிறது. இந்தப் பொருட்களின் 10 தொகுதிகளுக்கு மேல் இந்த ஆய்வுக்கூடத்தில் சோதிக்கப்பட்டுள்ளன.

கொவிட்-19க்கு எதிரான போரில் முன்னணியில் இருந்து வரும் குவாலியர் டிஆர்டிஇ நிறுவனம் ,இனி எச்எல்எல் நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து தருவித்த முகக்கவசங்கள் மற்றும் உடல் பொருத்த உபகரணங்களை, அவை பல்வேறு முகமைகளுக்கு விநியோகிக்கப்படுவதற்கு முன்பாக அவற்றை ,ஆய்வு செய்து உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படும்.


 



(Release ID: 1615066) Visitor Counter : 201