விவசாயத்துறை அமைச்சகம்

பூசா தூய்மையாக்கல், கிருமி நீக்க சுரங்க நடைபாதையை வேளாண் இணை அமைச்சர் திரு கைலாஷ் சௌத்ரி திறந்து வைத்தார்.

Posted On: 16 APR 2020 4:14PM by PIB Chennai

புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனமும் (ICAR)பீகார் மாநிலம் பூசாவில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் பொறியியல் துறையும் இணைந்து தூய்மையாக்கல், கிருமி நீக்கச் சுரங்க நடைபாதையை உருவாக்கியுள்ளன. இன்று இந்த சுரங்க நடைபாதையை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலவாழ்வு இணை அமைச்சர் திரு.கைலாஷ் சௌத்ரி திறந்து வைத்தார்இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை, ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறையின் செயலாளரும் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை இயக்குநருமான டாக்டர்.திரிலோசன் மகோபத்ரா, மற்றும் புதுதில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனஇயக்குநர் டாக்டர் ஏ.கே.சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காலால் அழுத்தி சோப் மற்றும் தண்ணீரை வெளிவரச்செய்து கைகழுவுதல், சுரங்க நடைபாதையில் 20 விநாடிகளுக்கு கிருமிநாசினியை புகையாக வெளியிடுதல் ஆகியன இந்தக் கிருமி நீக்கல் செயல் தொகுப்பில் உள்ளடங்கும். இந்த சுரங்க நடைபாதையில் சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளபடி சிறந்த கிருமிநாசியான குவார்ட்டனரி அமோனியம் கூட்டுப்பொருள்கள் (quaternary ammonium compounds - QAC) 0.045 சதவீத அடர்த்தியில் பயன்படுத்தப்படுகின்றன.


(Release ID: 1615035) Visitor Counter : 266