சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

குறுகிய காலத்துக்குள் மருந்துகளின் மொத்த உற்பத்தி அவை கிடைக்கச் செய்வதை அதிகரிப்பது சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு அறிக்கை 2006இல் முக்கிய திருத்தம்

Posted On: 15 APR 2020 7:34PM by PIB Chennai

கோவிட்-19 தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள எதிர்பாராத நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் தட்பவெப்ப நிலை அமைச்சகம், சுற்றுச்சூழல் பாதிப்பின் மதிப்பீடு அறிக்கை 2006ல் திருத்தம் ஒன்றை மார்ச் 26 ம் தேதி அன்று வெளியிட்டுள்ளது.

பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மொத்தமாக தயாரிக்கப்படும் மருந்துகளும், அதற்குத் தொடர்புடைய இடைநிலைப் பொருட்களும், இதுவரை இருந்த பிரிவிலிருந்து பி2 பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளன.

அடிப்படை விவரங்கள் சேகரிப்பு, சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு குறித்த ஆய்வுகள் மற்றும் பொதுமக்கள் கலந்தாலோசனைகள் ஆகியவற்றைச் சேகரிக்க வேண்டும் என்ற நிபந்தனையில் இருந்து பி2 பிரிவு பொருட்களுக்கு விலக்கு உண்டு.

சுமார் இரண்டு வாரங்களுக்குள், இந்தப் பிரிவின் கீழ், நூறுக்கும் மேற்பட்ட திட்டங்கள் வரப் பெற்றுள்ளன. இவை அந்தந்த மாநிலங்களில் உள்ள சம்பந்தப்பட்ட கட்டுப்பாட்டு முறைப்படுத்தும் அமைப்புகளிடம், இறுதி முடிவுக்காக பல்வேறு நிலைகளில் உள்ளன.

***    



(Release ID: 1614965) Visitor Counter : 224