பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
ஜம்மு-காஷ்மீரில் தினசரி 350 மாதிரிகளுக்கும் மேலாக கோவிட்-19 தொற்று பரிசோதனை செய்யும் திறன் அதிகரிப்பு: டாக்டர் ஜிதேந்திர சிங்
प्रविष्टि तिथि:
14 APR 2020 8:19PM by PIB Chennai
ஜம்மு-காஷ்மீரில் கோவிட்-19 தொற்று பரிசோதனை மேற்கொள்ளும் திறன், தினசரி 350-க்கும் மேலான மாதிரிகள் என்ற அளவுக்கு உயர்ந்திருப்பதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். இது மிகப்பெரும் சாதனை. ஏனெனில், இரண்டு-மூன்று வாரங்களுக்கு முன்பு, தினசரி 50 மாதிரிகளை பரிசோதனை செய்யும் அளவே திறன் இருந்தது.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள கோவிட் சுகாதார வசதிகள் குறித்து ஆடியோ மூலம் விரிவான ஆலோசனை நடத்திய டாக்டர் ஜிதேந்திர சிங், சுகாதாரத் துறையினர் மற்றும் யூனியன் பிரதேச மருத்துவத் துறையில் ஆர்வமுடன் பணியாற்றிவரும் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார்.
மேலும், ஏற்கனவே இருந்ததைவிட, தற்போது அதிக அளவிலானோருக்கு நோய்த் தொற்று குறித்து முடிவு செய்யப்படுவதற்கான காரணத்தை டாக்டர் ஜிதேந்திர சிங் எடுத்துரைத்தார். முன்னதாக, தினசரி 50 மாதிரிகளை சோதனைக்கு அனுப்புவதற்கே சிரமம் இருந்த நிலையில், தற்போது குறைந்த நாட்களுக்குள் 7 முதல் 8 மடங்கு அதிகரித்திருப்பதாக அவர் கூறினார்.
பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் பார்க்கும்போது, கோவிட்-19 தொற்று வடிவில் திடீரென உருவாகியுள்ள சவால்களை எதிர்கொள்வதில், தனது சுகாதார வசதிகளை ஜம்மு-காஷ்மீர் வேகமாக மேம்படுத்தியுள்ளதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். உதாரணமாக, தனிமைப்படுத்துவதற்கான படுக்கைகளின் எண்ணிக்கையை 1,533-லிருந்து 2,372-ஆக அதிகரித்துள்ளதாக அவர் கூறினார். கூடுதலாக 1,689 படுக்கைகளை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஜிதேந்திர சிங் கூறினார்.
(रिलीज़ आईडी: 1614677)
आगंतुक पटल : 179