உள்துறை அமைச்சகம்

கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான தொகுக்கப்பட்ட திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்

Posted On: 15 APR 2020 11:18AM by PIB Chennai

கோவிட்-19 நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முடக்கநிலை காலத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தொகுக்கப்பட்ட வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் 2020 மே 3ஆம் தேதி வரையில் தொடரும் என்று 2020 ஏப்ரல் 14 ஆம் தேதியன்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட உத்தரவின் தொடர்ச்சியாக, மத்திய அமைச்சகங்கள் / துறைகள், மாநில / யூனியன் பிரதேச அரசுகள் முடக்கநிலை காலத்தில் கடைபிடிக்க வேண்டிய திருத்திய தொகுக்கப்பட்ட வழிகாட்டுதல்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கோவிட்-19 மேலாண்மைக்கான தேசிய அறிவுறுத்தல்களையும் வழிகாட்டுதல்கள் வரையறுத்துள்ளன. அலுவலகங்கள், பணியிடங்கள், உற்பத்தித் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் தனிநபர் இடைவெளியைப் பராமரித்தலுக்கான நிலையான செயல்பாட்டு வழிமுறைகள் (SOP); மற்றும் முடக்கநிலை விதிகளை மீறுவோர் மீது பேரழிவு மேலாண்மைச் சட்டம் 2005 மற்றும் ஐ.பி.சி. 1860-இன் கீழ் பொருத்தமான பிரிவுகளின் படி விதிக்கவேண்டிய அபராதம் பற்றியும் அதில் கூறப்பட்டுள்ளது.

பொது மக்களின் சிரமங்களைக் குறைக்கும் வகையில், சில கூடுதல் செயல்பாடுகளுக்கும் அனுமதி அளிக்கப்படும். அவை 2020 ஏப்ரல் 20ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வரும். இருந்தாலும், இந்த புதிய செயல்பாடுகளை, தற்போது அமலில் உள்ள முடக்கநிலை அமலுக்கான வழிகாட்டுதல்களை கடுமையாக அமல் செய்வதன் அடிப்படையில் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்கள் / மாவட்ட நிர்வாகங்கள் செயல்படுத்த வேண்டும். இந்த விதிமுறைத் தளர்வுகளை செயல்படுத்துவதற்கு முன்னதாக  அலுவலகங்கள், பணியிடங்கள், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்கள், மற்றும் தேவையான பிற இடங்களில் தனி நபர் இடைவெளியைப் பராமரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்திருப்பதை, மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் / மாவட்ட நிர்வாகங்கள் உறுதி செய்திட வேண்டும்.

 

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் / மாவட்ட நிர்வாகங்களால், நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதி என எல்லை வரையறை செய்யப்பட்ட பகுதிகளுக்கு தொகுக்கப்பட்ட திருத்திய வழிகாட்டுதல்கள் பொருந்தாது. நோய்க்கட்டுப்பாட்டு மண்டலப்பட்டியலில் புதிதாக ஒரு பகுதி சேர்க்கப்பட்டால், அதுவரையில் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த மேற்குறிப்பிட்ட விஷயங்களுக்கு தற்காலிகத் தடை விதிக்கப்படும்.  மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி குறிப்பாக அனுமதிக்கப்பட்ட விஷயங்கள் அதில் சேராது.

இணைக்கப்பட்டுள்ள தொகுக்கப்பட்ட திருத்திய வழிகாட்டுதல்களை கடுமையாகப் பின்பற்றுவதை மத்திய அமைச்சகங்கள் / துறைகள், மாநில / யூனியன் பிரதேச அரசுகள் உறுதி செய்திட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

 

தொகுக்கப்பட்ட திருத்திய வழிகாட்டுதல்களைக் காண இங்கே கிளிக் செய்யவும்

மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்தைக் காண இங்கே கிளிக் செய்யவும்



(Release ID: 1614666) Visitor Counter : 342