மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

கட்டுடல் இந்தியா மற்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் பொது முடக்கத்தின் இரண்டாவது கட்டத்தில் முதன்முதலாக பள்ளி மாணவர்களுக்கான நேரலை உடற்தகுதி வகுப்புகளுக்கு ஏற்பாடு, ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்கள் பகிர்ந்து கொள்ளப்படும்

நேரலை உடற்தகுதி வகுப்புகள் ஏப்ரல் 15-ம் தேதி காலை மணி 9.30க்கு தொடங்கும், இந்த நேரலை அமர்வைக் காண கட்டுடல் இந்தியா, சிபிஎஸ்இ கையாளும் முகநூல், இன்ஸ்டாகிராமை அணுகலாம்

Posted On: 14 APR 2020 4:09PM by PIB Chennai

மத்திய அரசின் முக்கிய உடல் ஆரோக்கிய இயக்கமான கட்டுடல் இந்தியா இயக்கம் நிகழ்ச்சியின் கீழ், நடத்தப்படும் உடற்தகுதி அமர்வுகளுக்கு பெரும் வரவேற்பு காணப்படுவதைத் தொடர்ந்து, மேலும் புதிய தொடர் உடற்தகுதி அமர்வுகள் தொடங்கப்பட உள்ளன. இம்முறை ,மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் சிபிஎஸ்இ உடன் கூட்டாகச் சேர்ந்து நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்காக  ஏற்பாடு செய்யப்படும்.

முதன்முறையாக மேற்கொள்ளப்படும் இந்த முன்முயற்சி பற்றிக் குறிப்பிட்ட மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’, ‘’ கட்டுடல் இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டது முதல் அதற்கு சிபிஎஸ்இ ஆதரவு அளித்தது. 13,868 சிபிஎஸ்இ பள்ளிகள் கடந்த காலத்தில் கட்டுடல் இந்தியாவின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளன. 11,682 சிபிஎஸ்இ பள்ளிகள் ஏற்கனவே, கட்டுடல் இந்தியா கொடியைப் பெற்றுள்ளன’’, என்று கூறியுள்ளார்.

ஆன்லைன் அமர்வுகள் தற்போதைய நிலையில் மிகவும் அவசியமானவை என்று மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. கிரண் ரிஜிஜூ கூறியுள்ளார்.

இந்த நேரலை அமர்வுகளை, ஏப்ரல் 15ம் தேதி  காலை மணி 9.30-க்கு, கட்டுடல் இந்தியா இயக்கம், சிபிஎஸ்இ கையாளும் முகநூல், இன்ஸ்டாகிராம் மூலம் மாணவர்கள் எளிதில் அணுகலாம். அனைத்து அமர்வுகளும், யு டியூப் சேனலிலும் வெளியிடப்படுகிறது. மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ப அவற்றைப் பார்க்கலாம்.



(Release ID: 1614466) Visitor Counter : 126