பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் பத்திரிகை அறிக்கை
Posted On:
14 APR 2020 3:51PM by PIB Chennai
கொரோனா வைரஸ் காரணமாக முடக்கநிலை அமலில் இருப்பதால் 20.03.2020இல் இருந்து புதுடெல்லியில் உள்ள மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் மற்றும் நாடு முழுக்க உள்ள அதன் கிளைகள் செயல்பட முடியாத நிலை உள்ளது. வீடியோ வசதி இல்லாததாலும், அதில் உள்ள சிரமங்கள் காரணமாகவும், காணொளிக் காட்சி மூலமான செயல்பாட்டுக்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. மத்திய அரசு எடுக்கும் முடிவைப் பொருத்து 14.04.2020க்குப் பிறகு நிலைமையை மறுஆய்வு செய்ய உத்தேதிக்கப்பட்டிருந்தது.
இன்றைக்கு மாண்புமிகு பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றியபோது, 03.05.2020 வரையில் முடக்கநிலை நீட்டிக்கப்படும் என்ற முடிவை அறிவித்தார். தீவிர பாதிப்பு இல்லாத பகுதிகளின் நிலை குறித்து 20.04.2020இல் மறு ஆய்வு செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, இப்போதுள்ள நிலைமை 20.04.2020 வரையில் தொடரும். தீர்ப்பாயங்கள் உள்ள இடங்களில் அமர்வுகளின் செயல்பாடுகள் பற்றி, 20.04.2020இல் வெளியாகும் அறிவிப்பைப் பொருத்து மறு ஆய்வு செய்யலாம்.
ஏதாவது அமர்வின் முன்பு அவசர விசாரணை தேவைப்படுவதாக வழக்கறிஞர்களிடம் இருந்து ஏதும் கோரிக்கைகள் வந்தால், அதை முதன்மைப் பதிவாளருக்குத் தெரிவிக்கலாம். அவசரத்தன்மையை ஆய்வு செய்து, அவர் அதுகுறித்து தேவையான அறிவுறுத்தல்களை வழங்குவார்.
(Release ID: 1614429)
Visitor Counter : 195