ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

கொவிட்-19 பரவல் காரணமாக தேசிய அளவில் ஊரடங்கு அமலில் உள்ள போதிலும், விவசாயிகளுக்கு உரங்களை போதுமான அளவில் வழங்க முழு வீச்சில் இயங்கி வருவதை தேசிய உர நிறுவனம் (NFL) உறுதி செய்கிறது.

Posted On: 14 APR 2020 3:31PM by PIB Chennai

கொவிட்-19 பரவல் காரணமாக தேசிய அளவிலான ஊரடங்கின் போது, இரசாயன மற்றும் உர அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய உரங்கள் நிறுவனம், விவசாயிகளுக்குப் போதுமான உரங்களை வழங்குவதை உறுதி செய்கிறது.

நங்கல், பதிந்தா, பானிபட் மற்றும் விஜெய்பூரிலுள்ள இரண்டு ஆலைகளில் உற்பத்திப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தேசிய உர நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு மனோஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இந்த ஐந்து ஆலைகளும் தினசரி 11 ஆயிரம் மெட்ரிக் டன் உரங்களை உற்பத்தி செய்வதுடன், உற்பத்தியாகும் உரங்கள் தொடர்ந்து சந்தைக்கும் அனுப்பப்படுகின்றன.

இந்திய அரசு, அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின் கீழ் நாட்டில் உர ஆலைகளை இயக்க அனுமதித்துள்ளது, இந்த ஊரடங்கு காலத்தில் விவசாயத் துறை பாதிப்பிற்குள்ளாவது இதனால் தவிர்க்கப்படுவதுடன், வரவிருக்கும் இலையுதிர்காலப் பருவத்திற்குத் (Kharif season) தேவையான உரங்களை போதுமான அளவில் பெறவும் முடியும்.

•••••••••••••••



(Release ID: 1614382) Visitor Counter : 125