விவசாயத்துறை அமைச்சகம்
தேசிய விவசாய சந்தையின் வலைதளமான e-NAM, 14 ஏப்ரல் 2020 அன்று நான்கு ஆண்டுகளை நிறைவு செய்கிறது; விவசாயப் பொருள்களுக்கான 'ஒரே தேசம், ஒரே சந்தை' என்ற லட்சியத்தை எட்டுவதற்கு இது உதவியுள்ளது.
Posted On:
13 APR 2020 8:56PM by PIB Chennai
தேசிய விவசாய சந்தையின் வலைதளமான e-NAM நான்கு ஆண்டுகளை இன்று (ஏப்ரல் 14, 2020) நிறைவு செய்கிறது. இந்தத் தருணத்தில், விவசாயிகளின் அணுகலை அதிகப்படுத்துவதற்கும், விவசாயப் பொருள்களுக்கான 'ஒரே தேசம், ஒரே சந்தை' என்ற கருத்தை மேம்படுத்துவதற்கும், விவசாய சந்தைப்படுத்துதலில் e-NAM ஒரு புதுமையான முயற்சி என்று மத்திய விவசாயம், கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சர் திரு. நரேந்திர சிங் தோமர் கூறினார்.
விவசாயிகளுக்கு விளை பொருள்களின் சந்தைப்படுத்துதலை எளிதாக்க வேண்டியதன் அவசியத்தைக் கருத்தில் கொண்டு, பிரதமரால் 14 ஏப்ரல், 2016 அன்று 21 மண்டிகளில் e-NAM தொடங்கப்பட்டது. இது தற்போது 16 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 585 மண்டிகளை அது சென்றடைந்துள்ளது.
மேலும் 415 மண்டிகளுக்கு e-NAM விரிவுபடுத்தப்படுவதாக கூறிய அவர், இது, e-NAM மண்டிகளின் எண்ணிக்கையை 1000 ஆக விரைவில் உயர்த்தும் என்றார். இந்திய விவசாய சந்தையை சீர்திருத்துவதில் இந்த ஆன்லைன் மின்னணு தளம் ஒரு மிகப்பெரிய பாய்ச்சலாக இருக்கும் என தெரிவித்தார்.
e-NAM தளத்தில் 1.66 கோடிக்கும் அதிகமான விவசாயிகளும், 1.28 லட்சம் வியாபாரிகளும் பதிவு செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
(Release ID: 1614231)
Visitor Counter : 143