வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

நெருக்கடி நிலையை சமாளிப்பதற்கான துரிதத்திட்டம்: தூய்மை இந்தியா நகர்ப்புறத்திட்டத்தின் கீழ் சூரத் நகரம் தயாரிப்பு

Posted On: 13 APR 2020 3:34PM by PIB Chennai

உலக அளவிலான கோவிட்-19 நோய்ப் பரவல் உலகத்திற்கே ஒரு நெருக்கடியைக் கொடுத்து, இந்தியாவையும் அதன் நகரங்களையும் பாதிக்க ஆரம்பித்தபோது, சூரத் நகரம் தன்னுடைய குடிமக்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு சேவை புரிவதற்கும், நெருக்கடி நிலையை சமாளிப்பதற்கான துரிதத் திட்டம் ஒன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்தியது. குஜராத் மாநில அரசு பின்பற்றக்கூடிய மாதிரி திட்டமாகவே (ப்ளூ பிரிண்ட்) இது மாறியது.

விவரங்களைத் தானாகவே கிடைக்கச் செய்யும் வகையில், தொற்றுநோயியல் முக்கோணம் எனப்படும் (காரணி, பெறுபவர், சூழல் அம்சங்கள்) என்ற மூன்று அம்சங்களில் வெகுவாக தாக்கத்தை ஏற்படுத்தும் நோய்த்தொற்றுப் பரிமாற்றச் சங்கிலித் தொடரைத் தகர்த்து, இந்த மும்முனைகளிலும் தாக்குதல் நடத்தி, ஒரு மனிதரிடமிருந்து மற்றொரு மனிதருக்கு அது பரவுவதைக் குறைக்க வேண்டும் என்ற தெளிவான நோக்கத்துடன் விவரங்களை சேகரித்து இந்த துரிதத் திட்டம் செயலாற்றுகிறது.

கோவிட் 19 நோய்க்கு எதிராபோராட்டத்தில் மூன்று அணுகுமுறைகள் கொண்ட  3T Strategy (டிராக் டெஸ்ட் ட்ரீட்) (Track, Test, Treat)  எனப்படும் இத்திட்டம் தொற்று இருக்கக் கூடியவர்களை  அடையாளம் காண்பது, தொற்றுநோய் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை முன்கூட்டியே கண்டறிவது, தொற்று நோய் உள்ளது என உறுதிப்படுத்தப்பட்ட நபர்களுக்கு, அதிகபட்ச கவனத்துடன் கூடிய சிகிச்சை அளிப்பது உட்பட மூன்று உத்திகளைக் கையாள்கிறது.

நோய் தாக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் அனைத்து நபர்களையும் கண்டறிந்து, அவர்களுக்குப் பரிசோதனை செய்வது SMC COVID-19  Tracker System’ எனப்பட்டது. இந்த முறையின் படி ஐந்து நாட்களுக்குள் நோய் தாக்கியிருக்கக் கூடிய நபரைக் கண்டறிந்துவிட முடியும். இதற்கான இணையதளம் மற்றும் அலைபேசி செயலி SMC COVID-19 டிராக்கர் முறையில் உள்ளது. வெளிநாடுகளுக்கு அல்லது மாநிலங்களுக்கிடையில் பயணம் மேற்கொண்டவர்கள் மற்றும் கோவிட்-19 உள்ளது என்று உறுதி செய்யப்பட்ட நபருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்கள் ஆகியவர்களைக் கண்டறிய இந்த முறை பயன்படுகிறது..

SMC உதவி தொலைபேசி எண் 1800-123-800 கொடுக்கப்பட்டுள்ளது. பயணம் செய்தவர்கள் அல்லது கோவிட்-19 இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களைப் பற்றிய விவரங்களை குடிமக்கள், இந்தத் தொலைபேசி எண் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். இதை சுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட SMC குழுவினர் பரிசோதிப்பார்கள். தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களைக் கண்காணிப்பது, அவர்களுக்கு ஏதேனும் அறிகுறி தெரிந்தால், அவர்களைத் தொடர்பு கொள்வது என்பதையும் இந்தச் செயலி தொடர்ந்து கவனிக்கும்.



(Release ID: 1613999) Visitor Counter : 193