அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கோவிட் 19 தொற்றுக்கு எதிராக பன்முக ஆய்வுப் பணி: உயிர்மம் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் முனைப்பு

Posted On: 12 APR 2020 11:45AM by PIB Chennai

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் ஆய்வு கவுன்சிலும் (Council of Scientific & Industrial Research – CSIR) ஹைதராபாத்தில் இயங்கும் உயிர்மம் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையமும் (Centre for Cellular and Molecular Biology - CCMB) இணைந்து “கோவிட் 19” (COVID-19) தொற்றை ஒழிப்பதற்கான பல்வேறு ஆய்வுகள், நடைமுறைகளைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.

 

உயிர்மம் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் (CCMB) கோவிட் 19 தொற்றை ஒழிப்பதற்கான அதிகாரபூர்வ மையமாகச் செயல்பட்டு வருகிறது. அது தெலுங்கானாவில் 33 மாவட்டங்களில் அரசு மருத்துவமனைகளிலிருந்து நோயாளிகளின் மாதிரிகளைச் சேகரித்து “சார்ஸ் – கோவி 2” (SARS-CoV-2) தொற்றுக் கிருமிகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. தற்போது அங்கு நாளொன்றுக்கு 350 மாதிரிகளைக் கொண்டு ஆய்வு செய்ய முடியும்

.

ஹைதராபாதில் உள்ள நிஜாம் மருத்துவ அறிவியல் நிறுவனம் (Nizam's Institute of Medical Sciences - NIMS),  நோய்த்தடுப்பு மருத்துவ ஆய்வு நிறுவனம் (Institute Of Preventive Medicine - IPM), அரசு மருத்துவமனை, வாரங்கல் காகாதியா மருத்துவக் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த  25 மருத்துவர்கள், மருத்துவத் தொழில்நுட்பப் பணியாளர்கள், மாணவர்களுக்கு உயிர்மம் மற்றும் மூலக்கூறு உயிரியல் மையம் பயிற்சி அளித்தது.

பயிற்சி பெற்றவர்கள் தாங்கள் பணியாற்றும் மருத்துவ நிலையங்களில் தொற்று குறித்து ஆய்வு செய்வர். மேலும், நோயாளிகளின் மாதிரிகளைச் சிறப்பாகக் கையாண்டதை விளக்கும் வகையில் இந்தப் பயிற்சி தொடர்பான வீடியோக்களையும் உயிர்மம் – மூலக்கூறு உயிரியல் மையம் உருவாக்கியுள்ளது. இந்த வீடியோக்களை அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் பெறலாம். அதற்குத் தொடர்பு கொள்வதற்கான மின்னஞ்சல் : director@ccmb.res.in

 

அறிவியல் மற்றும் தொழில் ஆய்வு கவுன்சிலின் ஆய்வகங்கள் “சார்ஸ் – கோவி 2” (SARS-CoV-2) தொற்றின் மரபணு வரிசைமுறை குறித்த ஆய்வில் முன்னணியில் உள்ளன.

 

தொற்றுக் கிருமி வளர்ச்சியைக் குறித்து அறிவதற்கான ஆய்வில் அறிவியல் மற்றும் தொழில் ஆய்வு கவுன்சிலின் உயிர்மம் – மூலக்கூறு உயிரியல் மையம் (CSIR-CCMB) ஈடுபட்டு வருகிறது. விரைவில் ஆய்வு முடிவுகள் தெரியவரும்.

 



(Release ID: 1613602) Visitor Counter : 152