விவசாயத்துறை அமைச்சகம்
முடக்கநிலைக் கட்டுப்பாடுகளின் சிரமங்களையும் மீறி, கோடைப் பருவப் பயிர்களுக்கான விதைப்புப் பணிகள் தடங்கல் இல்லாமல் தொடர்கின்றன
Posted On:
11 APR 2020 5:37PM by PIB Chennai
வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகன் நலன் துறை தொகுத்துள்ள புள்ளிவிவரங்களின் படி 2020 ஏப்ரல் 10 ஆம் தேதி நிலவரத்தின்படி, கோடைப் பருவப் பயிர்களின் (அரிசி, பயறுகள், சிறு தானியங்கள் மற்றும் எண்ணெய் வித்துகள் உள்பட) சாகுபடிப் பரப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. 11.64 லட்சம் ஹெக்டரில் இந்தப் பணிகள் தொடங்கியுள்ளன. இது முந்தைய ஆண்டைவிட அதிகம். கோவிட்-19 பாதிப்பு, மார்ச் 25 ஆம் தேதியில் இருந்து முடக்கநிலை அமல், சமூக இடைவெளி பராமரிப்பு, அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட பி்ன்னடைவுகள் ஆகியவற்றை சமாளித்து, இந்த முன்னேற்றம் நிகழ்ந்துள்ளது.
2018-19 ஆம் ஆண்டில் மொத்த சாகுபடி பரப்பு 37.12 லட்சம் ஹெக்டராக இருந்தது. 2019-20இல் கோடைப் பருவ விதைப்பு 48.76 லட்சம் ஹெக்டரில் நடைபெற்றது. கடந்த ஆண்டு ஏப்ரல் 10இல் இதே வார காலத்தில் இது 41.81 லட்சம் ஹெக்டராக இருந்தது.
`கோடை பயிர்கள் சாகுபடி பரப்பு அதிகரிப்பு' குறித்த அட்டவணையை இங்கே காணலாம் -
https://static.pib.gov.in/WriteReadData/userfiles/ACFrOgDaWnJxkzeJ1W7zAIFur4o_pMxZZv1qHx2iEGlvo0HxNeazYuaVArDd_kk8Vo48nP6ZTPQjDGfu6xKSC2BhXh6Gr6kvObgMjqvL37lYMvnMC14wmXr4Y_A1K18=.pdf
(Release ID: 1613520)
Visitor Counter : 158