மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

கொவிட்-19 நிலைமையின் போது மாணவர்களுக்கு கற்றலை கொண்டு செல்வதற்காக மனித வள மேம்பாடு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி பல்வேறு நடவடிக்கைகளை கேந்திரிய வித்யாலயா சங்கதன் எடுத்துள்ளது.

Posted On: 11 APR 2020 6:35PM by PIB Chennai

மாணவர்களின் நேரத்தை சிறப்பான வகையில் பயன்படுத்துவதற்கும், கல்வி அட்டவணையோடு இணைந்து பயணிப்பதற்கும் டிஜிட்டல் தளங்களை உகந்த அளவில் பயன்படுத்துமாறு நாட்டிலுள்ள கல்வி நிறுவனங்களின் தலைவர்களை மத்திய மனித வள மேம்பாடு அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் 'நிஷாங்க்' அறிவுறுத்தி இருந்தார்.

மனித வள மேம்பாடு அமைச்சகத்தின் பரிந்துரையை கருத்தில் கொண்டு, ஆறு முதல் பதினொன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அனைத்துப் பாடங்களையும் ஆன்லைனில் தொடங்குவதற்காக முகநூல் மற்றும் யூடியூபில் கணக்கு உருவாக்கும் முயற்சியை கேந்திரிய வித்யாலயா சங்கதனின் தில்லி பிராந்திய அலுவலகம் எடுத்தது.

பாடங்களை நடத்த ஆரம்பித்த இரண்டே நாட்களில் 90,000 பார்வைகள் மற்றும் 40,000 கருத்துகளுடன் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தில்லி பிராந்தியத்தின் யூடியூப் சேனலில் 13,343 சந்தாதாரர்கள் இருக்கிறார்கள்.

கூகுள் ஃபார்ம் (Google Form), கஹூட்.காம் (Kahoot.com), (கொள்குறி வினாக்களுக்காக), ஹாட் பொட்டாடோஸ் (Hot potatoes) மற்றும் குவிஸ்ஸஸ்.காம் (Quizzes.com) போன்ற பல்வேறு செயலிகளையும், மென்பொருள்களையும் பயன்படுத்தி ஆசிரியர்கள் வீட்டுப்பாடத்துக்கான கேள்விகள், முன்னுரிமைப் பணிகளை (Assignmentsமாணவர்களுக்கு அனுப்புகிறார்கள்.



(Release ID: 1613517) Visitor Counter : 178