ரெயில்வே அமைச்சகம்
பொது முடக்கத்தின் முதல் இரண்டு வாரங்களில் மட்டும் உதவி எண்கள் 138 & 139, சமூக ஊடகங்கள் இமெயில் மூலமாக 2,05,000 கேள்விகளுக்கு ரயில்வே ஊழியர்கள் பதில் அளித்துள்ளனர்
Posted On:
11 APR 2020 2:54PM by PIB Chennai
ரெயில்வே பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு உதவவும் சரக்குப் போக்குவரத்து தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்கவும் பொது முடக்க அறிவிப்புக்குப் பிறகு உதவி எண்கள் வசதிகளை இந்திய ரயில்வே மேம்படுத்தி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட பிறகு இந்த வசதியானது மிகப்பெரும் நிர்வாக வெற்றியாக மாறி உள்ளது. பொது முடக்கம் அறிவித்த முதல் இரண்டு வாரங்களில் நிர்ணயிக்கப்பட்ட தொடர்பியல் முறைகளில் ரெயில்வே ஊழியர்கள் 2,05,000 கேள்விகளுக்குப் பதில் அளித்துள்ளனர். இதில் 90% பதில்கள் (1,85,000க்கும் அதிகமான பதில்கள்) நேரடியாக தொலைபேசி மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
ரயில் மதாத் (குறைதீர்ப்பு) உதவி எண் 139 மூலம் ஒருவருக்கு ஒருவர் என்ற அடிப்படையில் பொது முடக்கத்தின் முதல் இரண்டு வாரங்களில் 1,40,000 கேள்விகளுக்குப் பதில் அளிக்கப்பட்டு உள்ளது
உதவி எண் 138ல் பெறப்படும் அழைப்புகள் புவி-வரம்பு எல்லை கொண்டவை ஆகும். அழைப்பவர்கள் இருக்கும் இடத்துக்கு ஏற்ப அருகில் உள்ள ரயில்வே மண்டல கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு வரும் அழைப்புகள் உள்ளூர் மொழி மற்றும் உள்ளூர் பிரச்சனைகளை நன்கு தெரிந்து வைத்துள்ள ரயில்வே ஊழியர்கள் இந்த அழைப்புகளை 24 மணி நேரமும் கையாள்கின்றனர். இதனால் அழைப்பைக் கையாள்பவர்கள் தங்களுக்குத் தெரிந்த மொழியில் தகவலையும் ஆலோசனையையும் பெற முடிகிறது. இந்தப் புதிய அம்சம் மொழித்தடை என்ற பிரச்சனையை தீர்த்து விடுகிறது. ரெயில்வே வாடிக்கையாளர்கள் மற்றும் பிறருக்கு தகவல் வேகமாகத் தெரிவிக்கப்படுகிறது. ரெயில்வே மண்டலத்தில் தேவையான தகவல் தயாராக வைக்கப்பட்டு உடனடியாக வழங்கப்படுவது போன்று இந்த வேகம் இருக்கிறது.
(Release ID: 1613379)
Visitor Counter : 187