சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
கோவிட் 19 ஊரடங்கு காலத்தின் போது, பிரபல ஆன்மீக பிரச்சாரகரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் கோவிட் 19 தொடர்பான காணொளி மாநாடு ஒன்றுக்கு வருமான வரித்துறை மேல் முறையீட்டுத் தீர்ப்பாயம் ஏற்பாடு செய்திருந்தது
Posted On:
11 APR 2020 3:30PM by PIB Chennai
நாட்டில் ஆன்மீகப் பாதையைத் தேடுகின்ற மக்களின் பங்கேற்புடன் வருமான வரித்துறை தீர்ப்பாயத்துடன் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும், சமுதாயத்திற்கும், நண்பர்களுக்கும், உடல், மனம், உணர்வு சார்ந்த நலன்களைக் கருத்தில் கொண்டு, நேற்று புதுதில்லியில் காணொளி மூலமாக தேசிய அளவிலான கருத்தரங்கு ஒன்றுக்கு வருமான வரி மேல் முறையீட்டுத் தீர்ப்பாயம் ஏற்பாடு செய்திருந்தது. தற்போது, மனிதகுல வரலாற்றிலேயே மிக மோசமான ஒரு கட்டத்தில் உலகம் முழுவதுமே இருக்கிறது. மனிதகுலம் வருங்காலத்தைப் பற்றி ஒருவித அச்சம் கொண்டுள்ளது. இதற்கு மாற்றாக ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அலுவலகத்தில் பணிபுரியும் போதும், குடும்பத்திலும் சமுதாயத்திலும், எவ்வாறு மகிழ்ச்சியுடன் இருப்பது என்ற தலைப்பில் பிரபல ஆன்மிக ஆசானும், பிரச்சாரகருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சொற்பொழிவாற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு வருமான வரி மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத் தலைவர் நீதிபதி திரு பி.பி.பட், தலைமை வகித்தார். வருமான வரி மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் அனைத்து துணைத் தலைவர்கள், தீர்ப்பாயத்தின் உறுப்பினர்கள், ரெஜிஸ்ட்ரி பணியாளர்கள் எனப் பலர் தங்கள் குடும்பத்துடன், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தாம் பெற்ற பயன்கள் குறித்து சமுதாயத்தில் பெரும்பாலான உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொண்ட நீதிபதி திரு பட், வருமான வரி வழக்குரைஞர் சங்க உறுப்பினர்கள், வருமான வரித்துறை உறுப்பினர்கள் மற்றும் நாடு முழுவதுமுள்ள இதர மக்களும் இதன் மூலம் பயனடையுமாறு அழைப்பு விடுத்தார். பல்வேறு உயர்நீதிமன்றங்களின் தற்போதைய நீதிபதிகள் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள், மத்திய சட்டத்துறைச் செயலர் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்களும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
*******
(Release ID: 1613328)
Visitor Counter : 241