ரெயில்வே அமைச்சகம்
அனைத்து முக்கிய மையங்களையும் இணைக்கும்வகையில் 58 வழித்தடங்களில் 109 சரக்குப்பெட்டக (பார்சல்) ரயில்கள் அறிமுகம்
प्रविष्टि तिथि:
08 APR 2020 6:37PM by PIB Chennai
நாடு முழுவதும் பொருட்கள் வழங்கு தொடரை(சப்ளை செயின்) ஊக்குவிக்கும் வகையில், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் இதர பொருட்களின் போக்குவரத்துக்காக, அட்டவணையிடப்பட்ட சரக்குப்பெட்டக பார்சல் ரயில்களின் தங்குதடையற்ற சேவையை, இந்திய இரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது. சாமானிய குடிமக்கள், தொழில்துறையினர், வேளாண் துறையினருக்குத் தேவையான முக்கியமான பொருட்கள் கிடைப்பதை இது அதிகரிக்கச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட நாள் முதல், 58 வழித்தடங்களில் 109 ரயில்கள் – சரக்குப் பெட்டக பார்சல் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2020 ஏப்ரல் 5 அன்று வரை, 27 தடங்கள் அறிவிக்கப்பட்டன. இவற்றுள் 17 தடங்கள் வழக்கமான திட்டமிடப்பட்ட சேவைகள். மற்றவை ஒருமுறை மட்டும் இயக்கப்பட்டவை. இதைத் தொடர்ந்து, 40 புதிய தடங்கள் கண்டறியப்பட்டு, அறிவிக்கப்பட்டுள்ளன. முந்தைய தடங்களில் செல்லப்பட்ட சில சேவைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தியாவிலுள்ள அனைத்து முக்கிய நகரங்களும், அத்தியாவசியப் பொருட்கள் விரைவு போக்குவரத்து தொடர்புடையவையாக இருக்கும். இந்த சேவைகள், மேலும் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அட்டவணையிடப்பட்ட சரக்குப் பெட்டக பார்சல் ரயில்கள் பற்றிய விவரங்களுக்கு : https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612304
(रिलीज़ आईडी: 1612420)
आगंतुक पटल : 225
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada