அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
உள்ளூர் விவசாயிகளுக்கு நன்மைகளை அளிக்கிறது வேளாண் விஞ்ஞானியால் மரபணு மாற்றம் செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட கேரட் வகை
Posted On:
08 APR 2020 11:30AM by PIB Chennai
குஜராத்தின் ஜுனாகத் மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி திரு. வல்லபாய் வஸ்ரம்பாய் மார்வானியா, உருவாக்கிய அதிக பீ கரோட்டினும் இரும்பு சத்தும் உள்ளடக்கிய மரபணு மாற்றம் செய்யப்பட்ட கேரட் வகையான மதுபன் காஜர், அப்பகுதியில் உள்ள 150 க்கும் மேற்பட்ட உள்ளூர் விவசாயிகளுக்கு பயனளித்து வருகிறது. இது ஜுனகாத்தில் 200 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்படுகிறது, ஹெக்டேருக்கு சராசரியாக 40 முதல் 50 டன் மகசூல் தரும் இந்த கேரட் வகை உள்ளூர் விவசாயிகளுக்கு முக்கிய வருவாய் ஆதாரமாக மாறியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 1000 ஹெக்டேருக்கு மேற்பட்ட நிலங்களில் இந்த வகை கேரட் பயிரிடப்படுகிறது.
தேசிய கண்டுபிடிப்பு அறக்கட்டளை - சோதனைகளில், மதுபன் காஜர் கேரட் வகையானது மற்ற கேரட் வகைகளுடன் ஒப்பிடும்போது கணிசமாக அதிக வேர் விளைச்சலையும் (ஹெக்டேருக்கு 74.2 டன்) மற்றும் அதிக தாவர உயிர் சத்தையும் (ஒரு செடிக்கு 275 கிராம்) கொண்டுள்ளது என்பதையும் கண்டறிந்துள்ளது.
புது தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர், (ஃபோயின்-17) புதுமையான கண்டுபிடிப்புகளுக்காக விருது வழங்கும் விழாவில் திரு. வல்லபாய் வஸ்ரம்பாய் மார்வானியா வாஸ்க்கு தேசிய விருதை வழங்கினார். அவரது அசாதாரண பணிகளுக்காக கடந்த 2019 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.
••••••••••
(Release ID: 1612246)
Visitor Counter : 218