பிரதமர் அலுவலகம்

பிரதமர் திரு. நரேந்திர மோடி ஓமன் சுல்தானுடன் தொலைபேசியில் கலந்துரையாடல்

Posted On: 07 APR 2020 5:43PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ஓமன் சுல்தான் மாட்சிமைக்குரிய ஹைத்தம் பின் டாரிக் உடன் தொலைபேசியில் கலந்துரையாடினார்.

கொவிட்-19 நோய்த் தொற்று சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள சுகாதார மற்றும் பொருளாதார சவால்கள் பற்றி இரு தலைவர்களும் பேசினர். இதைக் கட்டுப்படுத்த தங்கள் நாடுகளில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பற்றி அவர்கள் கருத்துகள் பகிர்ந்து கொண்டனர். இந்த நெருக்கடியைக் கையாள்வதில் இரு நாடுகளும் சாத்தியமான வழிகளில் இருதரப்பு ஆதரவை பகிர்ந்து கொள்வதற்கு இருவரும் ஒப்புக்கொண்டனர்.

இப்போதைய சூழ்நிலையில் ஓமனில் இருக்கும் இந்திய சமுதாயத்தினரின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பதாக பிரதமர் திரு. நரேந்திர மோடியிடம் மாட்சிமைக்குரிய சுல்தான் கூறினார்.  இந்தியாவில் உள்ள ஓமன் குடிமக்களுக்கு சமீபத்தில் அளித்த உதவிக்காக பிரதமர் திரு. மோடிக்கு அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மாட்சிமைக்குரிய சுல்தான் குவாபூஸ் மறைவுக்கு பிரதமர் திரு. மோடி மீண்டும் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார். மாட்சிமைக்குரிய சுல்தான் ஹைத்தமின் ஆட்சிக் காலம் சிறப்பாக அமையவும், ஓமன் மக்களுக்கு அமைதியும், வளமும் கிடைக்கவும் பிரதமர் வாழ்த்துகள் தெரிவித்தார். இந்தியாவின் இரண்டாம் நிலை நட்பு நாடுகளில் மிக முக்கிய நாடாக ஓமன் இருப்பதாகவும் பிரதமர் மோடி உறுதிப்படுத்தினார்.

 



(Release ID: 1612146) Visitor Counter : 126