பாதுகாப்பு அமைச்சகம்
தமிழகம், புதுவையில் கொவிட்-19 தொற்றுக்கு எதிரான சேவை நடவடிக்கைகளைத் தொடங்கினர் தேசிய மாணவர் படையினர்
Posted On:
06 APR 2020 3:58PM by PIB Chennai
தேசிய மாணவர் படையின் முதுநிலைப் பிரிவினர் தொண்டாற்றுமாறு குடிமை மற்றும் காவல் துறை நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இதில் சிலர் தங்கள் சேவையை இன்று முதல் தொடங்கியுள்ளனர். தேசிய மாணவர் படையினருக்கு தற்காலிகப் பணியமர்த்தம் வழங்க பாதுகாப்பு அமைச்சகம் கடந்த வாரம் அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பான விதிமுறைகள் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த என்சிசி பிரிவினர் , நிவாரண நடவடிக்கைகளில், மாநில மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு துணைபுரிவார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், என்சிசி பிரிவினரை கொவிட்-19க்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுத்த, அது தொடர்பான மாவட்ட அதிகாரியை மாவட்ட காவல்துறை அணுகியுள்ளது. இரண்டு பெண்கள் உள்பட 57 தேசிய மாணவர் படையினர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மொத்தமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபர் இயக்ககம் ,தமிழகத்தில் 75 பேரையும், புதுச்சேரிக்கு 57 பேரையும் வழங்கியுள்ளது.
தேசிய மாணவர் படையினருக்கு அழைப்பு மையங்கள், உதவி மையங்களில் பணி, நிவாரணப்பொருட்கள், மருந்துகள், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம், சமுதாய உதவி, தரவு மேலாண்மை, வரிசை மற்றும் போக்குவரத்து மேலாண்மை, சிசிடிவி கட்டுப்பாட்டு அறைகளில் பணி ஆகிய வேலைகள் அளிக்கப்படும்.
(Release ID: 1611905)
Visitor Counter : 218