நித்தி ஆயோக்

நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி தலைமையில் அதிகாரம் பொருந்தியக் குழுவை அமைத்தது இந்திய அரசு

Posted On: 05 APR 2020 10:06AM by PIB Chennai

பிரச்சினைகளையும் பயனுள்ள தீர்வுகளையும் கண்டறிவதற்கும், திட்டங்களை உருவாக்கவும் அதிகாரம் பொருந்திய குழு எண். 6 உருவாக்கப்பட்டுள்ளது.

தொழில் துறை சங்கங்கள், தொழில் அமைப்புகள் மற்றும் சமூக சமுதாய அமைப்புகளோடு 30 மார்ச் முதல் 3 ஏப்ரல் வரையான அவர்களின் பங்களிப்பு, வரும் வாரங்களுக்கான திட்டங்கள், அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள் மற்றும் அரசிடம் இருந்து அவர்களின் எதிர்ப்பார்ப்புகள் குறித்து இதுவரை ஆறு கூட்டங்கள் நடத்தப்பட்டன.

சர்வதேச அமைப்புகள்- ஐநாவின் இந்தியாவுக்கான உள்ளுறை ஒருங்கிணப்பாளர் மற்றும் உலக சுகாதார மையம், ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம், ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியம், ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம், சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு, ஐநா மகளிர், ஐநா வாழ்விடம் உணவு மற்றும் விவசாய அமைப்பு, உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் இந்தியத் தலைவர்களோடு அதிகாரம் பொருந்தியக் குழு எண். 6 விரிவான கூட்டங்களை நடத்தியது.

சமூக சமுதாய அமைப்புகள் மற்றும் வளர்ச்சிப் பங்குதாரர்கள்- 40க்கும் மேற்பட்ட முக்கிய சமூக சமுதாய அமைப்புகள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களோடு விரிவான கலந்துரையாடல்களை அதிகாரம் பொருந்தியக் குழு எண். 6 நடத்தியது. நிதி ஆயோக்கின் தர்பன் இணையதளத்தில் பதிவு செய்து கொண்டுள்ள 92000 சமூக சமுதாய அமைப்புகள்/அரசு சாரா தொண்டு நிறுவனங்களை, முக்கிய இடங்களைக் கண்டுபிடித்து, அங்குள்ள வயதானோர், ஊனமுற்றோர், குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர் மற்றும் இதர பாதிக்கக்கூடிய குழுக்களுக்கு உதவிகளை அளிக்க தன்னார்வலர்கள் மற்றும் பராமரிப்பாளர்களை நியமித்து அரசுக்கு உதவும் படி கேட்டுக்கொண்டு, நிதி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரி எழுதியுள்ளார்.

 

தொழில் துறை சங்கங்கள்- தனியார் துறை மற்றும் புது நிறுவனங்களுக்குள் (ஸ்டார்ட் அப்) கூட்டுச்சேர்க்கையை உருவாக்கி சுகாதாரக் கருவிகள் மற்றும் தனிநபர் பாதுகாப்பு சாதனங்களைத் தயாரிக்க வைக்க துறைகளுக்கிடையேயான பேச்சுவார்த்தையை இந்தக் குழு தொடங்கி வைத்துள்ளது.



(Release ID: 1611285) Visitor Counter : 286