மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவால் உருவாக்கப்பட்ட, கோவிட்-19 மாணவர்கள் உதவி இணையதளத்தை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் தொடங்கி வைத்தார்

Posted On: 03 APR 2020 7:45PM by PIB Chennai

கோவிட்-19 தொற்று பரவல் மற்றும் தேசிய பொது முடக்கத்தை கருத்தில் கொண்டு, கல்லூரிகள் மற்றும் விடுதிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களைக் களைய ஒரு தனித்துவமான கோவிட்-19 மாணவர்கள் உதவி இணையதளத்தை மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு உருவாக்கியுள்ளது.

மனித வள மேம்பாட்டு அமைச்சர் திரு. ரமேஷ் பொக்ரியால் "நிஷாங்க்" இந்த இணையதளத்தை (https://helpline.aicte-india) தொடங்கி வைத்தார். கிராஃபிக் எரா பல்கலைக்கழகத்தின் பயிற்சி மாணவர்களான ஷிவான்ஷு மற்றும் ஆகாஷ் ஆகியோர் ஒரே நாளில் இந்த இணையதளத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்

"உதவத் தயாராக இருப்பவர்களை, உதவித் தேவைப்படுபவர்களோடு இணைப்பதே இந்த இணையதளத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். தங்குமிடம், உணவு, ஆன்லைன் வகுப்புகள், வருகைப் பதிவேடு, தேர்வுகள், உதவித்தொகை, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் துன்புறுத்தல் ஆகியவை உதவிகளின் கீழ் வரும்," என்று அமைச்சர் தனது உரையில் கூறினார்



(Release ID: 1611106) Visitor Counter : 140