மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்

கோவிட் 19 தொற்றை வெற்றி கொள்ள செயல்மிகு தீர்வுகளைக் கண்டுபிடிப்பதற்கு 'ஹேக் தி கிரைஸிஸ் இந்தியா' என்னும் ஆன்லைன் ஊடுருவல் போட்டியை தொடங்கி வைத்தார் திரு. சஞ்சய் தோத்ரே

Posted On: 03 APR 2020 7:46PM by PIB Chennai

கோவிட்-19 தொற்று பரவல் நோயை வெற்றி கொள்வதற்கானசெயல்மிகு தீர்வுகளைக் கண்டுபிடிக்க, 'ஹேக் தி கிரைஸிஸ்- இந்தியா' என்னும் ஆன்லைன் ஊடுருவல் (ஹேக்கத்தான்) போட்டியை மின்னணு தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் திரு. சஞ்சய் தோத்ரே தொடங்கி வைத்தார். உலகளாவிய இந்த ஹேக்கத்தான், 'ஹேக் காஸ்- இந்தியா' மற்றும் 'ஃபிக்கி பெண்கள் அமைப்பு, புனே' ஆகியோரால் இந்திய அரசின் மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஆதரவுடன் நடத்தப்படுகிறது.

கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போரை வலுப்படுத்துவதே இந்த ஊடுருவல் போட்டியின் நோக்கமாகும். இதில் வெல்லும் அணிகளின் யோசனைகள், அமல்படுத்தக்கூடிய தீர்வுகளாக இந்திய மற்றும் உலக மக்களுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"உலகத்துக்கும் தொழில்களுக்கும் எதிர்பாராத சவால்களை கோவிட்-19 இன்று விடுத்துள்ளது. தொழில் தடைகள் மற்றும் எங்கிருந்தோ வேலை செய்யும் நிலைமைகளுக்கு இடையே நாம் அனைவரும் ஒரே தேசமாக இந்த சவால்களை எதிர்த்து போராடிக் கொண்டிருக்கும் வேளையில், மனிதகுலம் வலிமையாக எழுவதற்கு, அரசாங்கம், தொழில் துறை மற்றும் தனிப்பட்ட ஒவ்வொருவரும் தங்கள் மொத்த வலிமையோடும் பங்களித்து இதில் இருந்து வெளியே வருவது அவசியம்," என்று திரு. சஞ்சய் தோத்ரே தனது உரையில் கூறினார்.

"இந்தியா, எஸ்டோனியா மற்றும் ஃபின்லாந்த் ஆகியவற்றின் நிபுணத்துவ கண்காணிப்போடு நடைபெறும் இந்த 48 மணி நேர ஹேக்கத்தானில் 2000க்கும் மேற்பட்ட அணிகளில் உள்ள 15000க்கும் அதிகமான போட்டியாளர்கள் தங்கள் செயல் மாதிரிகளை மேம்படுத்துவார்கள். இந்தியாவின் சிறந்த அணிகள் வரும் வாரங்களில் நடக்கும் 'ஹேக் தி கிரைஸிஸ் வேர்ல்டு' போட்டியில் பங்கேற்பார்கள்," என்று திரு. சஞ்சய் தோத்ரே மேலும் கூறினார்.

***(Release ID: 1611104) Visitor Counter : 62