பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்போட்டு நிறுவனம் பொது இடங்களை திறம்பட சுத்திகரிப்பதற்கான உபகரணங்களை உருவாக்குகிறது
Posted On:
03 APR 2020 6:27PM by PIB Chennai
கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான உள்நாட்டுத் தீர்வுகளை முடுக்கும் பணியில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வெவ்வேறு அளவிலான பகுதிகளை சுத்திகரிப்பதற்கான தொழில்நுட்பங்களுடன் தயாராக உள்ளது. டெல்லி தீ வெடிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், துப்புரவு உபகரணங்களுக்கு இரண்டு முக்கிய பொருட்களை உருவாக்கியுள்ளது. இவை தீ அணைக்க பயன்படும் தொழில்நுட்ப உத்தியை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிட்தக்கது.
முதுகு பையில் கிருமிநாசினி கொண்டு சுத்திகரிக்கும் கருவி - ஒரு சதவீத ஹைப்போகுளோரைட் கரைசலை, சந்தேகத்திற்கிடமான பகுதியில் தெளித்து சுத்திகரிக்க பயன்படுத்தப்படும் கருவி.
தள்ளுவண்டியில் கிருமிநாசினி கொண்டு பெரிய பகுதிகளை சுத்திகரிக்கும் கருவி - குறைந்த அழுத்த (கிருமிநாசினி திரவம்) தொழில்நுட்பத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்டது. இது பரவலான புகை மூட்டத்தை உருவாக்குகிறது. இந்த கருவி 3,000 சதுர மீட்டர் பரப்பளவில் கிருமிகளை நீக்கும் திறன் கொண்டது.
இவை இரண்டும் உடனடியான பயன்பாட்டிற்கு டெல்லி போலீசாருக்கு வழங்கப்படுகின்றன. இவற்றை தொழில் நிறுவனங்கள் உதவியுடன் பரவலாக கிடைக்க செய்ய ஆலோசிக்கப்படுகிறது.
•••••••••••••••
(Release ID: 1611076)
Visitor Counter : 160