பிரதமர் அலுவலகம்

அதிகாரம் பொருந்தியக் குழுக்களின் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார் பிரதமர்

கொவிட் 19ஐ எதிர்கொள்ள நாடு தழுவிய தயார்நிலையை ஆய்வு செய்தார்

Posted On: 04 APR 2020 3:19PM by PIB Chennai

கொவிட் 19 எதிர்ப்பு நடவடிக்கைகளைth திட்டமிட்டு, அவை நாடெங்கிலும் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய அமைக்கப்பட்ட அதிகாரம் பொருந்தியக் குழுக்களின் கூட்டுக் கூட்டத்திற்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தலைமை தாங்கினார்.

இதைப் பற்றி தனது சுட்டுரை (Twitter) பதிவுகளில் எழுதியுள்ள பிரதமர், மருத்துவமனைகள் கிடைக்கக்கூடிய தன்மை, சரியான தனிமைப்படுத்துதல், தொற்றுத் தடை காப்பு வசதிகள் போன்ற நாடெங்கிலும் உள்ள தயார்நிலை குறித்தும் கண்காணிப்பு, பரிசோதனை மற்றும் தீவிர சிகிச்சை பயிற்சி குறித்தும் ஆய்வு செய்ததாகாவும், தனிநபர் பாதுகாப்பு உபகரணம், முகக்கவசம், கையுறைகள் மற்றும் வென்ட்டிலேட்டர்கள் ஆகிய அனைத்து அவசிய மருத்துவ உபகரணங்களின் போதுமான அளவு தயாரிப்பு, வாங்குதல் மற்றும் கிடைத்தலை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட குழுக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

 

 

பிரதமர் அலுவலகம் (PMO INDIA)

  • @PMOIndia

கொவிட் 19 எதிர்ப்பு நடவடிக்கைகளை திட்டமிட்டு, அவை நாடெங்கிலும் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய  அமைக்கப்பட்ட அதிகாரம் பொருந்தியக் குழுக்களின் கூட்டுக் கூட்டத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.

பிரதமர் அலுவலகம் (PMO INDIA)

  • @PMOIndia

மருத்துவமனைகள் கிடைக்கக்கூடிய நிலைமை, சரியான தனிமைப்படுத்துதல் மற்றும் தொற்றுத் தடை காப்பு வசதிகள் போன்ற நாடெங்கிலும் உள்ள தயார்நிலை குறித்தும், நோய் கண்காணிப்பு, பரிசோதனை மற்றும் தீவிர சிகிச்சை பயிற்சி குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தார்.

பிரதமர் அலுவலகத்துக்கு பதிலளித்து (Replying to @PMOIndia)

மருத்துவமனைகள் கிடைக்கக்கூடிய நிலை, சரியான தனிமைப்படுத்துதல் தொற்றுத் தடை காப்பு வசதிகள் போன்ற நாடெங்கிலும் உள்ள தயார்நிலை குறித்தும், நோய் கண்காணிப்பு, பரிசோதனை மற்றும் தீவிர சிகிச்சை பயிற்சி குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தார்.

பிரதமர் அலுவலகம் (PMO INDIA)

  • @PMOIndia

தனிநபர் பாதுகாப்பு உபகரணம், முகக்கவசம், கையுறைகள் மற்றும் வென்ட்டிலேட்டர்கள் ஆகிய அனைத்து அவசிய மருத்துவ உபகரணங்களின் போதுமான அளவு தயாரிப்பு, வாங்குதல் மற்றும் கிடைத்தலை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட குழுக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.


(Release ID: 1611072) Visitor Counter : 201