சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

கோவிட்-19 தொற்றைத் தொடர்ந்து பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், வருமானவரி மேல்முறையீட்டு ஆணையம் வழக்கமான கலந்துரையாடலைத் தொடங்கியது

இடுகை இடப்பட்ட நாள்: 03 APR 2020 6:33PM by PIB Chennai

கோவிட்-19 தொற்றை சமாளிப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ள 21 நாள் பொது முடக்கத்தின் போது கிடைக்கும் நேரத்தை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வருமான வரி மேல்முறையீட்டு ஆணையம் வழக்கமான கலந்துரையாடல்களை காணொளி காட்சி மூலம் நடத்தத் தொடங்கி உள்ளது.  வருமான வரி மேல்முறையீட்டு ஆணையத் தலைவர் நீதியரசர் திரு.பி.பி.பாத் ஆணையத்தின் துணைத்தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் இத்தகைய கலந்துரையாடல் அமர்வுகள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் வழக்குகளைப் பைசல் செய்யும் விகிதத்தை அதிகரித்தல் மற்றும் நீதியாணைகளின் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான செயல் உத்திகளை உருவாக்கிக் கொள்ளவும் பயன்படுத்தலாம் எனத் தெரிவித்து உள்ளார்.

இந்திய அரசு அறிவித்துள்ள பொது முடக்கத்தை, சமூக இடைவெளியைப் பராமரித்தல் மற்றும் தனிமைப்படுத்திக் கொள்ளுதல் மூலம் தீவிரமாகக் கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்திய நீதியரசர் பாத் அலுவலகங்களுக்கு வந்து வேலை செய்வது என்பது இயலாத ஒன்று என்றும் வழக்கமான வேலைநாட்கள் போன்று வேலைத்தரத்தை தக்க வைப்பதும் சிரமமானது என்று தெரிவித்து உள்ளார்.  அதே சமயம் இந்தக் காலக்கட்டத்தில் நமது தொழில் திறன்கள் மற்றும் தகுதிகளை மேம்படுத்திக் கொள்வது என்பது முக்கியமானது என அவர் மேலும் தெரிவித்து உள்ளார்.

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1611047) வருகையாளர் எண்ணிக்கை : 140
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Telugu