உள்துறை அமைச்சகம்
வேளாண் எந்திரக் கடைகள், உதிரி பாகங்கள் மற்றும் பழுது நீக்குதல், லாரி பழுது நீக்குதல் மற்றும் தேயிலைத் தொழிலுக்கு கொவிட்-19 ஊரடங்கு முடக்கத்திலிருந்து விலக்கு அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் கூடுதல் உத்தரவு
प्रविष्टि तिथि:
03 APR 2020 10:15PM by PIB Chennai
அனைத்து அமைச்சகங்கள், துறைகளுக்கு நாடு தழுவிய கொவிட்-19 முடக்கத்தையொட்டி ஏற்கனவே பிறப்பித்திருந்த விதிமுறைகளுக்கான உத்தரவின் பிற்சேர்க்கையாக மத்திய உள்துறை அமைச்சகம் தற்போது கூடுதலாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொது முடக்கக் கட்டுப்பாடுகளில் இருந்து, வேளாண் எந்திரக் கடைகள், அவற்றின் உதிரி பாகங்கள் (அவற்றின் விநியோகம் உள்ளிட்டவை), பழுது நீக்குதல், நெடுஞ்சாலைகளில் உள்ள லாரி பழுது நீக்கும் கடைகள் (எரிபொருள் விற்பனை நிலையங்களில் உள்ளவற்றுக்கு முன்னுரிமை), 50 சதவீத தொழிலாளர்களுடன் கூடிய தோட்டங்கள் உள்ளிட்ட தேயிலைத் தொழில் ஆகியவற்றுக்கு விலக்கு அளிக்க இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
*****
(रिलीज़ आईडी: 1611019)
आगंतुक पटल : 257