உள்துறை அமைச்சகம்

கொவிட்-19க்கு எதிரான தேசிய முடக்கத்தின் போது அத்தியாவசியப் பொருள்கள் விநியோகத்தில் மாநிலங்கள் எதிர்கொள்ளும் கள அளவிலான பிரச்சினைகள் பற்றி மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம்

Posted On: 03 APR 2020 10:57PM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக, மத்திய அரசின் அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகள், மாநில, யூனியன் பிரதேச அரசுகள், யூனியன் பிரதேங்களின் அதிகாரிகள் தேசிய முடக்கத்தின் போது, மேற்கொள்ள வேண்டிய ஒருங்கிணைந்த விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

விலக்கு அளிக்கப்பட்டுள்ள பொருள்கள் குறித்து, கள அளவில் பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருவதால், அத்தியாவசியப் பொருள்களின் சுமுக விநியோகத்துக்கு இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. இந்த விதிமுறைகள் பற்றி சில தரப்பு ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. இவற்றைக் கருத்தில் கொண்டு, மத்திய உள்துறைச் செயலர் திரு.அஜய் குமார் பல்லா, அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். கொவிட்-19க்கு எதிரான தேசிய முடக்கத்தின் போது, அத்தியாவசியப் பொருள்கள் விநியோகத்தை சுமுகமாக மேற்கொண்டு , அதனை உறுதி செய்வதில் மாநிலங்கள் சந்திக்கும் கள மட்டத்திலான பிரச்சினைகள் குறித்து அவர் இந்தக் கடிதத்தில் விளக்கம் அளித்துள்ளார். பொது முடக்கக் கட்டுப்பாடுகளில் இருந்து  விலக்கு அளிக்கப்பட்ட பொருள்களின் பல்வேறு வகைகள் குறித்து இந்தக் கடிதத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

பரிசோதனைக் கூடங்களுக்கு முடக்கக் கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு தரப்பட்டுள்ளது என்பது கடிதத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை (இ-காமர்ஸ் மூலமாக உள்பட), உற்பத்தி, சேமிப்பு மற்றும் போக்குவரத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் விநியோகத்தை மேலும் சீர்படுத்தும் வகையில், பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.



(Release ID: 1610964) Visitor Counter : 85