ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

பிஎம்-கேர்ஸ் நிதியத்துக்கு இந்தியன் பொட்டாஷ் லிமிட்டெட் ரூ.5 கோடி நன்கொடை. இதனுடன் சேர்த்து உரத்துறையின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் நன்கொடை ரூ.32 கோடி

என்.எஃப்.எல் மற்றும் ஃபேக்ட் ஊழியர்கள் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை நன்கொடையாக வழங்கியதற்கு திரு. கௌடா பாராட்டு

Posted On: 03 APR 2020 4:27PM by PIB Chennai

வேதிப்பொருட்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் உரங்கள் துறையின் கீழ் செயல்படும் இந்தியன் பொட்டாஷ் லிமிட்டெடு (IPL) கொவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராகப் போராடும் அரசின் முயற்சிக்கு உதவும் வகையில் ரூ.5 கோடியை பிரதம மந்திரி குடிமக்கள் ஆதரவு மற்றும் நெருக்கடி சூழலில் நிவாரணம் (PM-CARES) நிதியத்துக்கு நன்கொடையாக வழங்கி உள்ளது.  இதையும் சேர்த்தால் உரங்கள் துறையின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த நன்கொடையானது ரூ.32 கோடியாக அதிகரித்து உள்ளது.

இந்தியன் பொட்டாஷ் லிமிட்டெட்டின் பங்களிப்பை பாராட்டிய திரு.கௌடா தனது ட்வீட் செய்தியில் இந்த நடவடிக்கை கொவிட்-19  பெருந்தொற்று காலத்தில் இந்திய அரசு எடுத்து வரும் நிவாரணப் பணிகளுக்கு வலு சேர்ப்பதாகவும் உதவுவதாகவும் இருக்கும் என்று தெரிவித்து உள்ளார்.

அமைச்சர் தனித்தனியாக வெளியிட்டுள்ள இரண்டு ட்வீட் செய்திகளில் நேஷனல் ஃபெர்டிலைசர் லிமிடெட் (NFL) நிறுவனத்தின் ஊழியர்கள் தங்களது ஒரு நாள் ஊதியமான ரூ.88 லட்சத்தை நன்கொடையாக அளித்ததையும் ஃபெர்டிலைசர் அண்ட் கெமிக்கல்ஸ் ட்ராவான்கூர் லிமிடெட் (FACT) ஊழியர்கள் தங்களது ஒரு நாள் ஊதியமான ரூ.50 லட்சத்தை நன்கொடையாக அளித்ததையும் பாராட்டி உள்ளார்.  

உரங்கள் துறையின் இஃப்கோ (IFFCO), கிரிப்கோ (KRIBHCO) மற்றும் என்எஃப்எல்-கிசான் (NFL-KISAN) போன்ற பல பொதுத்துறை நிறுவனங்களும் பிஎம்-கேர்ஸ் நிதியத்துக்கு ரூ.27 கோடிக்கு மேல் நன்கொடை அளித்துள்ளன.

******



(Release ID: 1610728) Visitor Counter : 121