அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

கோவிட்-19 மற்றும் இதர சுவாசத்தொற்று நோய்களைத் தடுப்பதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்ட முதல் கட்டத் திட்டங்கள்: விஞ்ஞான- பொறியியல் வாரியம் (டி எஸ் டி - எஸ் இ ஆர் பி) அறிவிப்பு

Posted On: 02 APR 2020 6:21PM by PIB Chennai

உலக சுகாதார நிறுவனம் உலக அளவிலான தொற்றுநோய் என்று அறிவித்துள்ள கோவிட் 19 வைரஸ் உலகம் முழுவதும் அதிவேகமாகப் பரவி வருகிறது.கொரோனா வைரஸ் நோயைத் தடுக்கக் கூடிய வேதியியல் சிகிச்சை முறைகள் மற்றும் நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய தடுப்பு மருந்துகள் இல்லாததால் தற்போது கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உலக மக்கள் அனைவரும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தியாவிலும் கோவிட் 19 தொற்று நோய் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, உலக அளவிலான இந்தத் தொற்று  நோய்க்கு எதிரான சிறப்பு ஆய்வுத் திட்டங்களை, தேசிய ஆராய்ச்சி வளர்ச்சி அமைப்புகள் அனைத்தும், உடனடியாக விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின், விஞ்ஞான- பொறியியல் வாரியம் (Science and Engineering Research Board) அறிவித்திருந்தது..

மேல்கட்ட ஆய்வுகளுக்கும், நடைமுறைப்படுத்தப்படக் கூடிய தொழில்நுட்பமாக மாற்றுவதற்காகவும்,  முதல் கட்டமாக, ஐந்து திட்டங்கள் தேர்வு செய்யப்படுள்ளன. இவற்றில் மூன்று திட்டங்கள், வைரசுக்கு எதிரான மற்றும் தனிநபர் பாதுகாப்புக் உபகரணங்கள் (Personal Protection Equipment - PPE); உயிரற்ற தளங்களில், வைரசுக்கு எதிரான பூச்சு பூசுவது போன்றவற்றுடன் தொடர்புடைய, மிக உயர் முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுகள் தொடர்பானவை.

இன்னொரு திட்டம், கோவிட் 19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் கண்டறிந்து, மருத்துவ சிகிச்சை வழங்குவதற்காக வளர்சிதை மாற்ற உயிரியல் குறிப்பான்களைக் (Identification of Metabolite Biomarkers) கண்டறிவது தொடர்பானது.

கொரோனா வைரசின் கிளைக்கோபுரோட்டின் அதிகரிக்கக் கூடிய ஆதரவான பகுதிக்கு எதிராக, எதிர்ப்புப் பொருள்களைக் கண்டறிவது பற்றியது, மற்றொரு திட்டமாகும்.



(Release ID: 1610610) Visitor Counter : 132