மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
கொவிட்-19-ஆல் சமூகத்தில் ஏற்பட்டுள்ள உளவியல் ரீதியிலான தாக்கம் குறித்த சமூக கருத்துக்களை மதிப்பிடுவதற்கான வினாப்பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இந்திய தேசிய புத்தக அறக்கட்டளை வெளியிட்டுள்ளது
प्रविष्टि तिथि:
02 APR 2020 4:30PM by PIB Chennai
கொவிட்-19 மற்றும் அதைத் தொடர்ந்த பொது முடக்கம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண பல பரிமாண அணுகுமுறையை மத்திய அரசு எடுத்து வருவதன் தொடர்ச்சியாக, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் புத்தக வெளியீடு மற்றும் மேம்பாட்டு அமைப்பான தேசிய புத்தக அறக்கட்டளை, தொற்றால் ஏற்பட்டுள்ள உளவியல் ரீதியிலான சமூக தாக்கம் குறித்து 7 கையேடுகளை வெளியிடத் தயார் நிலையில் உள்ளது. தொற்று பரவலால் ,உளவியல் ரீதியாக சமூகத்தில் ஏற்பட்டுள்ள தாக்கத்தைச் சமாளிக்க, உளவியல் நிபுணர்கள் மற்றும் ஆலோசகர்களைக் கொண்ட ஆய்வுக்குழு, சமூக கருத்துக்களை மதிப்பிடுவதற்கான கொரோனோ ஆய்வுகளைத் துவங்க உள்ளது.
பொதுமக்கள், ஆன்லைன் வினாக்கள் பட்டியல் ஆய்வில் பங்கேற்று, தமது உணர்வுகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட குடும்பங்களும் தங்களது கருத்துக்களை கூறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். வினாக்களுக்கான இணைப்பு : https://nbtindia.gov.in/home__92__on-line-questionnaire-for-nbt-study.nbt.
(रिलीज़ आईडी: 1610390)
आगंतुक पटल : 159