உள்துறை அமைச்சகம்

கொவிட்-19க்கு எதிரான 21 நாள் முடக்கத்தின் போது பிரதமரின் கரீப் கல்யாண் திட்டப் பயனாளிகளுக்கு பணத்தை அமைதியான முறையில் பட்டுவாடா செய்யுமாறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது

प्रविष्टि तिथि: 02 APR 2020 5:02PM by PIB Chennai

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிதி சேவைகள் துறை, கொவிட்-19க்கு எதிரான 21 நாள் முடக்கத்தின் போது பிரதமரின் கரீப் கல்யாண் திட்டப் பயனாளிகளுக்கு பணத்தை வங்கிகள் வாயிலாக பட்டுவாடா செய்வதற்கான விரிவான நெறிமுறைகளை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் திரு.அஜய் குமார் பல்லா எழுதியுள்ள கடிதத்தில், சமூக விலகல் முறையை கடைபிடித்து, பிரதமரின் கரீப் கல்யாண் திட்டப் பயனாளிகளுக்கு பணத்தை அமைதியான முறையில் பட்டுவாடா செய்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

*****


(रिलीज़ आईडी: 1610361) आगंतुक पटल : 135
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam