குடியரசுத் தலைவர் செயலகம்

இந்திய ஜனாதிபதி கோவிட்-19 குறித்து நாளை ஆளுநர்கள், துணை ஆளுநர்கள், மாநில மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்.

Posted On: 02 APR 2020 2:38PM by PIB Chennai

இந்திய குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், இந்தியாவின் துணை குடியரசுத் தலைவர் திரு எம்.வெங்கையா நாயுடுவுடன் இணைந்து நாளை (ஏப்ரல் 3, 2020) குடியரசுத்தலைவர் மாளிகையில் இருந்து அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் ஆளுநர்கள், துணை ஆளுநர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இணையவழி மாநாடு நடத்தவுள்ளார். அதில் கோவிட்-19 தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்தவும் நிர்வகிக்கவும் மத்திய மற்றும் மாநில அளவில் எடுத்துள்ள முயற்சிகளை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

இது ஆளுநர்கள் / துணை ஆளுநர்கள் மற்றும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் நிர்வாகிகளுடன் நடைபெறும் இரண்டாவது இணையவழி மாநாடாகும். ஏற்கனவே, மார்ச் 27, 2020 அன்று நடைபெற்ற முதல் இணையவழி மாநாட்டில் 14 ஆளுநர்களும், டெல்லி துணை ஆளுநரும் தங்கள் மாநிலங்களில் நடைபெற்று வரும் செயல்பாடுகள் குறித்து பகிர்ந்து கொண்டனர். எஞ்சிய ஆளுநர்கள் / துணை ஆளுநர்கள் மற்றும் நிர்வாகிகள் தங்கள் அனுபவங்களை நாளை பகிர்ந்து கொள்வார்கள்.

மாநிலங்களில் கோவிட்-19ன் நிலை, ரெட் கிராஸ் சங்கத்தினர் எளிதில் நோய் தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் மீது செலுத்தி வரும் கவனம், தன்னார்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையினர், மாநில அரசுகள் கொரனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு அளித்து வரும் ஆதரவு ஆகியவை குறித்து விவாதிப்பதே இந்த இணைய மாநாட்டின் நோக்கம்.

•••••••••••••••



(Release ID: 1610344) Visitor Counter : 1481