ரெயில்வே அமைச்சகம்
கோவிட்-19 தொற்றுக்கு எதிரான பொது முடக்கக் காலத்தில் அத்தியாவசிய பொருள்கள் இதர சரக்குகள் போக்குவரத்தில் பார்சல் ரயில்கள் பெரும் பாங்காற்றுகின்றன
Posted On:
02 APR 2020 12:56PM by PIB Chennai
கோவிட்-19 தொற்றுக்கு எதிரான பொது முடக்கக் காலத்தில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய அத்தியாவசிய பொருள்கள் மற்றும் இதர சரக்குகளை நாடெங்கிலும் கொண்டு செல்வதில் இந்திய ரயில்வேயின் பார்சல் ரயில்கள் தொடர்ந்து சேவையாற்றுகின்றன. அத்தியாவசிய பொருள்களை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சரக்கு ரயில்கள் மூலமாக இந்திய ரயில்வே ஏற்கனவே அனுப்பிக் கொண்டிருக்கிறது. உணவு தானியங்கள், சமையல் எண்ணெய், உப்பு, சர்க்கரை, நிலக்கரி, சிமென்ட், பால், காய்கறி, பழங்கள் போன்ற அத்தியாவசிய பொருள்களின் மொத்த போக்குவரத்து தேவைகளை சரக்கு ரயில் சேவைகள் பூர்த்தி செய்து வரும் நிலையில், சிறிய அளவுகளில் இருக்கும் பல்வேறு பொருட்களின் போக்குவரத்தை பார்சல் ரயில்கள் செய்கின்றன.
இதுவரை, 30 சிறப்பு பார்சல் ரயில்களை நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் இந்திய ரயில்வே அனுப்பி உள்ளது. மருந்துகள் மற்றும் புத்தகங்களை சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு ஒரு ரயில் எடுத்து சென்ற நிலையில், பயிர் விதைகளை சேலத்தில் இருந்து ஹிசாருக்கு இன்னொரு ரயில் எடுத்து சென்றது.
மக்கள் எந்தவொரு அத்தியாவசியப் பொருளுக்கும் பற்றாக்குறையை உணரக் கூடாது என்பதற்காக, மேற்கண்ட வேலைகளில் இருக்கும் பணியாளர்கள் இந்த கோவிட்-19 தொற்றுக்கு எதிரான பொது முடக்கக் காலத்தில் எண்ணற்ற சவால்களை எதிர்கொள்கின்றனர்.
பணியாளர்களின் சிறப்பான செயல்பாடுகள் அளித்த உற்சாகத்தில், கால அட்டவணையுடன் கூடிய பார்சல் ரயில்களை மண்டல ரயில்வேக்கள் 31 மார்ச், 2020ல் இருந்து இயக்க ஆரம்பித்துள்ளன.
தெற்கு ரயில்வேயைப் பொறுத்தவரை, சென்னையில் இருந்து தில்லிக்கு வாரமொரு முறை இந்த ரயில் சேவை இயக்கப்படும்.
கோவிட்-19 தொற்றை எதிர்த்து போரிடுவதற்கான பொது முடக்க நேரங்களில் நாடு முழுதும் அத்தியாவசிய சரக்குகள் மற்றும் பொருள்கள் விரைந்து சென்று சேர்ந்து பற்றாக்குறையின்றி கிடைக்க, இந்திய ரயில்வே மற்ற பகுதிகளுக்கும் வழிகளைக் கண்டுவருகிறது. தேவையைப் பொறுத்தும் சிறப்பு பார்சல் ரயில்களை திட்டமிடலாம். சிறப்பு பார்சல் ரயில்கள் மூலம் முக்கிய வழித்தடங்களை இணைக்க தெற்கு ரயில்வே கண்டறிந்துள்ளது:
1. படேல் நகர் (தில்லி பகுதி) - கோயமுத்தூர்
2. கோயமுத்தூர் - ராஜ்கோட்
3. ராஜ்கோட் - கோயமுத்தூர்
4. கோயமுத்தூர் - ஜெய்ப்பூர்
5. சேலம் - பதின்டா
இந்த கால அட்டவணையிடப்பட்ட ரயில்களுக்கு முன்கூட்டியே வரையறுக்கப்பட்ட நிறுத்தங்கள் உள்ளன. எந்த பொருளையும், எந்த அளவிலும் இந்த நிலையங்களில் எங்கிருந்து எங்கு வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். பொருள்களை விரைவாகவும் திறமையாகவும் கொண்டு செல்ல அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுகின்றன.
உள்ளூர் தொழிற்சாலைகள், மின்னணு வணிக நிறுவனங்கள், விருப்பமுள்ள குழுக்கள், அமைப்புகள், தனிப்பட்ட நிறுவனங்கள் மற்றும் வாய்ப்பிருக்கும் ஏற்றுமதியாளர்கள் மண்டல அளவில் உள்ல ரயில்வே அலுவலர்களை அணுகலாம். பார்சலை அனுப்ப யாரும் தொடர்பு கொள்ளக் கூடிய வகையில், பல்வேறு நிலையங்களில் உள்ள ரயில்வே அலுவலர்களின் தொடர்பு விவரங்கள் சுற்றில் அனுப்பப்பட்டுள்ளன. கிடைக்க செய்யப்பட்டுள்ளது. விளம்பரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் வாய்ப்பிருக்கும் வாடிக்கையாளர்களை மண்டல ரயில்வேக்கள் தொடர்பு கொண்டு வருகின்றன.
***
(Release ID: 1610331)
Visitor Counter : 202