நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
கோவிட்-19 தொற்று பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டிருக்கும் பொது முடக்க நிலையில், நாடு முழுவதும் உணவுதானிய விநியோகத்தை அதிகரித்து வருகிறது இந்திய உணவுக் கழகம்
Posted On:
01 APR 2020 9:16PM by PIB Chennai
கோவிட்-19 தொற்று காரணமாக பொது முடக்கம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், நாடு முழுவதும் கோதுமை, அரிசி விநியோகத்தை தடையில்லாமல் மேற்கொள்ள இந்திய உணவுக் கழகம் உறுதி பூண்டுள்ளது. இந்திய உணவுக் கழகம், தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதத்துக்கு 5 கிலோ தானியம் வீதம் வழங்க தயார் நிலையில் இருப்பதுடன், அடுத்த மூன்று மாதங்களுக்கு, பிரதமர் ஏழைகள் நலத் திட்டத்தின் கீழ் 81.35 கோடி பேருக்கு, நபர் ஒருவருக்கு 5 கிலோ வீதம் கூடுதலாக வழங்கவும் தயாராக உள்ளது. 31.3.2020 வரை, இந்திய உணவுக் கழகத்தின் கையிருப்பில், 56.75 மில்லியன் மெட்ரிக் டன் உணவு தானியம் (30.7 மில்லியன் மெட்ரிக் டன் அரிசி, 26.06 மில்லியன் மெட்ரிக் டன் கோதுமை) உள்ளது.
மொத்தமாக 53 அடுக்குகளில் சுமார் 1.48 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் 1.4.2020 அன்று ஏற்றப்பட்டது. பொது முடக்கம் துவங்கிய நாளான 24.3.2020 முதல் இந்திய உணவுக் கழகம், 352 அடுக்குகளில் மொத்தம் 9.86 லட்சம் மெட்ரிக் டன் தானியத்தை அனுப்பியுள்ளது.
(Release ID: 1610268)
Visitor Counter : 187