ரெயில்வே அமைச்சகம்
கொவிட்-19 பொது முடக்கத்தின் போது, தேவைப்படும் மக்களுக்கு தொடர்ந்து உணவு வழங்குகிறது இந்திய ரயில்வே; 28 மார்ச்சில் இருந்து 1.4 லட்சம் சமைக்கப்பட்ட உணவுகள் விநியோகம்
Posted On:
01 APR 2020 6:00PM by PIB Chennai
ரயில்வே பாதுகாப்பு படை, அரசு ரயில்வே காவல், மண்டலங்களில் உள்ள வணிக அலுவலகங்கள், மாநில அரசுகள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் உதவியோடு, இந்திய தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகத்தின் (IRCTC) சமையலறைகள் மூலம் மொத்தமாக சமைத்த உணவை மதிய உணவுக்கு காகிதத் தட்டுகளுடனும், இரவு உணவுக்கு பொட்டலங்களாகவும் இந்திய ரயில்வே தொடர்ந்து வழங்கி வருகிறது.
ரயில்வே பாதுகாப்புப் படை, இதர அரசுத் துறைகள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் உதவியோடு, பல்வேறு இடங்களில் உள்ள தன்னுடைய சமையலறைகளில் இருந்து 102,937 சாப்பாடுகளை, ஏழைகளுக்கும், உணவு தேவைப்படுவோருக்கும் 28 மார்ச் 2020ல் இருந்து இது வரை இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் வழங்கியுள்ளது.
தேவைப்படுவோருக்கு உணவு வழங்குதல் விநியோகப் பணியில் இந்திய ரயில்வேயின் ரயில்வே பாதுகாப்புப் படை பெரிய அளவில் ஈடுபட்டுள்ளது. 28 மார்ச் 2020ல் இருந்து இது வரை 95,773 தேவைப்படும் நபர்களுக்கு, ரயில்வே பாதுகாப்பு படை உணவு வழங்கியுள்ளது.
தங்களால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு மனிதர்கள் மூலமும், வளங்களின் மூலம் தேவைப்படும் மக்களுக்கு உணவையும் இதர உதவிகளையும் அளிக்குமாறு இந்திய ரயில்வே அதிகாரிகளை மத்திய தொடர்வண்டி, வணிகம் மற்றும் தொழில் அமைச்சர் திரு. பியுஷ் கோயல் அறிவுறுத்தி இருந்தார்.
(Release ID: 1610198)
Visitor Counter : 168