உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
உயிர்காப்பு உடான் விமான சேவைகள் மூலம் 70,000 கிலோ மீட்டருக்கு அதிகமான வான்வழி பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
01 APR 2020 8:48PM by PIB Chennai
உயிர்காப்பு உடான் சரக்கு விமான சேவைகள் மூலமாக, 74 சேவைகளில் 56 சேவைகள் ஏர் இந்தியா குழுமம் மூலம் அளிக்கப்பட்டுள்ளது. 2020 மார்ச் 26 முதல் 31 ஆம் தேதி வரையிலான ஆறு நாட்களில், ஏர் இந்தியா, அலையன்ஸ் ஏர், இந்திய விமானப்படை, பவன் ஹன்ஸ் மற்றும் தனியார் விமானங்கள் மூலம் விமான சேவைகள் அளிக்கப்பட்டுள்ளன. உயிர்காப்பு உடான் விமான சேவைகள் மூலம் இதுவரையில் 70 ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான வான்வழி பயணம் மேற்கொள்ளப்பட்டு, 38 டன்கள் அளவுக்கு சரக்குகள் கையாளப்பட்டுள்ளன.
குறைந்த எடையுள்ள அதிக எண்ணிக்கையிலான மாஸ்க்குகள், கையுறைகள் மற்றும் இதர பொருட்கள் இதில் பெரும்பகுதியாக இருந்தன. இவற்றுக்கு குறைந்த எடையிலான பொருட்களுக்கு அதிக அளவிலான இடம் தேவைப்படுகிறது.
(रिलीज़ आईडी: 1610188)
आगंतुक पटल : 124