உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்
அவசர காலத் தேவைகளுக்காக (Lifeline udan) 74 விமானங்கள் இயக்கப்படுகின்றன: ஒரே நாளில் 22 டன்களுக்கும் அதிகமான சரக்கு கொண்டு செல்லப்பட்டது
Posted On:
01 APR 2020 3:57PM by PIB Chennai
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் முயற்சியின் கீழ், அவசர காலத் தேவைகளுக்காக (lifeline udan) நாடு முழுவதும் மருத்துவ சரக்குகளை கொண்டு செல்வதற்கு 74 விமானங்கள் இன்று வரை இயக்கப்பட்டுள்ளன. மொத்தம் 37.63 டன் சரக்கு இன்று வரை கொண்டு செல்லப்பட்டுள்ளது, இதில் 22 டன்னுக்கு மேல் மார்ச் 31,2020 அன்று கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மார்ச் 31 அன்று, பின்வரும் விமானங்கள் இயக்கப்பட்டன
Lifeline 1: ஏர் இந்தியா விமானங்கள்: மும்பையிலிருந்து டெல்லி வரையிலும் சென்று பின் குவாஹாட்டிக்கும், அங்கிருந்து மும்பைக்கும் சரக்குகளை கொண்டு சென்றது. அங்கிருந்து மேகாலயா, அசாம், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் ( ICMR) நாகாலாந்து, அருணாச்சல் மற்றும் புனே ஆகிய பகுதிகளுக்கும் மருத்துவ சரக்குகளை ஏற்றி சென்றது.
Lifeline 2: ஏர் இந்தியா விமானங்கள்: புது தில்லியிலிருந்து ஹைதராபாத்திற்கும், திருவனந்தபுரத்திற்கும் பின் கோவா முதல் புதுதில்லி வரையிலும் சென்றது. இந்த விமானம் ஆந்திரா, கேரளா மற்றும் , இந்திய மருத்துவக் கவுன்சில் (ICMR) ஆகிய மாநிலங்களுக்குத் தேவையான சரக்குகளை ஏற்றி சென்றது.
Lifeline 3 : அலையன்ஸ் ஏர் விமானம்: ஹைதராபாத்திலிருந்து பெங்களூருக்கும், அங்கிருந்து ஹைதராபாத்திற்கும் ஜவுளி அமைச்சகத்தின் சரக்குகளை எடுத்துச் சென்றது.
Lifeline 4 : ஏர் இந்தியா விமானம்: சென்னையிலிருந்து போர்ட் பிளேயருக்கும் அங்கிருந்து சென்னைக்கும் இயக்கப்பட்டது.
Lifeline 5 : இந்திய விமானப்படை விமானம்: ஹிண்டனிலிருந்து (டெல்லி), சூலூர் வழியாக போர்ட் பிளேயருக்கு இயக்கப்பட்டது.
இந்தியாவின் COVID-19 க்கு எதிரான போரின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் மற்றும் அதற்கு அப்பாலும் மருத்துவ மற்றும் அத்தியாவசியப் பொருள்களைக் கொண்டு செல்வதற்காக, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், “லைஃப்லைன் உதான்” விமான போக்குவரத்தை இந்திய அரசு தொடங்கியுள்ளது.
•••••••••••••••
(Release ID: 1610030)
Visitor Counter : 220