ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மருந்து விலை ஆணையகத்தின் விலை கண்காணிப்பு மற்றும் வள பிரிவு இன்று தொடக்கம்
நமது நாடு கொவிட்-19-க்கு எதிராக போராடிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த பிரிவைத் தொடங்குவது முக்கியத்துவம் பெறுகிறது
Posted On:
01 APR 2020 2:05PM by PIB Chennai
தேசிய மருந்து விலை ஆணையகத்தின் விலை கண்காணிப்பு மற்றும் வள பிரிவு இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைக்கப்படுகிறது. விலை கண்காணிப்பு மற்றும் வள பிரிவு அமைக்கப்படும் 12-வது மாநிலம் ஜம்மு – காஷ்மீர் ஆகும்.
இந்த விலை கண்காணிப்பு மற்றும் வள பிரிவு, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் மருந்து கட்டுப்பாட்டாளர் துறையின் கீழ் இயங்கும்.
கொவிட்-19-க்கு எதிராக நமது நாடு போராடிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் மருந்து தட்டுப்பாடு/ பதுக்கல் ஆகியவை குறித்தும், அதிக விலையில் மருந்துகள் விற்கப்படுதல் குறித்தும் ஆராய இந்தப் பிரிவு தேசிய மருந்து விலை ஆணையத்திற்கும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கும் துணையாக இருக்கும்.
***
(Release ID: 1609929)
Visitor Counter : 168