விவசாயத்துறை அமைச்சகம்

கோவிட் -19 தொற்று அச்சுறுத்தலுக்கிடையே ரபி பருவ பயிர்கள் தொடர்பாக விவசாயிகளுக்கு இந்திய வேளாண் ஆய்வுக் கழகம் அறிவுரை

Posted On: 31 MAR 2020 5:41PM by PIB Chennai

கோவிட்-19 தொற்று பரவும் அச்சுறுத்தலுக்கிடையே, ரபி பருவ பயிர்களை அறுவடை செய்தல்; அறுவடைக்குப் பிந்தைய பணிகள்; சேமித்து வைத்தல்; விளைபொருட்களைச் சந்தைப்படுத்துதல் ஆகியவை குறித்து இந்திய வேளாண் ஆய்வுக் கழகம் அறிவுரை வழங்கியுள்ளது.

 

கோவிட்-19 தொற்று அச்சுறுத்தலுக்கிடையே ரபி பருவ பயிர்கள் முதிர்வடையும் தருவாயில் உள்ளன. வேளாண் பணிகள் கால அளவிற்குட்பட்டவை என்பதால், விளைச்சலை அறுவடை செய்வதும், கையாள்வதும், அவற்றைச் சந்தைக்குக் கொண்டு செல்வதும் மிக இன்றியமையாததாகும். எனினும், விவசாயிகள், இந்த நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும். சமூக விலகியிருத்தல்; தங்களைத் தூய்மையாக சுத்தமாக வைத்திருத்தல்; கைகளை சோப்புப் போட்டுக் கழுவுதல்; முகக் கவசம் அணிதல்; பாதுகாப்பான உடைகளை அணிதல்; உபகரணங்களையும் இயந்திரங்களையும் சுத்தம் செய்தல்; போன்றவை, எளிதில் பின்பற்றப்படக் கூடிய நடவடிக்கைகள். வயல்களில் நடக்கும் அனைத்து பணிகளின் போதும், களங்களில் நடைபெறும் அனைத்து பணிகளின் போதும், ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு செயல்பாட்டிலும், சமூக விலகலையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும், விவசாயப் பணியாளர்கள் பின்பற்ற வேண்டும்.

கோவிட்-19 தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக மக்கள் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கும் காலத்தில், விவசாயிகள் மற்றும் விவசாய பணிகளுக்காக இந்திய அரசு அறிவித்துள்ள விதிமுறைகளிலிருந்து, விவசாயம் மற்றும் விவசாயம் தொடர்பான பின்வரும் செயல்பாடுகளுக்கு முழு ஊரடங்கிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 

  1.  கால்நடை மருத்துவமனைகள்
  2. நிர்வாக சேவை அளிப்பவர்களின் செயல்பாடுகள் உட்பட விவசாய விளை பொருட்களை கொள்முதல் செய்யும் முகமைகள்
  3. விவசாய விளைபொருள் சந்தை குழுவால் அல்லது மாநில அரசால் அறிவிக்கப்பட்ட படி நடத்தப்படும் மண்டிகள் சந்தைகள்

 

  1. விவசாயிகளால் அல்லது விவசாய பணியாளர்களால் வயல்களில், களங்களில் செய்யப்படும் விவசாயப் பணிகள்
  2. விவசாய இயந்திரங்கள் தொடர்பான வழக்கமான வாடகை மையங்கள்
  3. இரசாயனங்கள், பூச்சிக்கொல்லிகள், விதைகள் ஆகியவற்றைத் தயாரிக்கும் மற்றும் பைகளில் அடைக்கும் பிரிவுகள்
  4. அறுவடை மற்றும் விதைக்கும் பணிகளுக்கான கூட்டு அறுவடை இயந்திரம், தோட்டக்கலை கருவிகள் போன்ற இயந்திரங்களை மாநிலங்களுக்குள்ளேயும், மாநிலங்களுக்கு இடையிலும் கொண்டு செல்வது

 

முழு அடைப்பு காலத்தின்போது, விவசாயிகளுக்கு எந்தவித சிரமங்களும் நேராமல் இருக்கவும், அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் தடங்கல் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யவும் உதவும் வகையில், விவசாயம் மற்றும் பண்ணை, தோட்டக்கலை தொடர்பான பணிகள் எந்தவித இடையூறுகளுமின்றி தொடர்ந்து நடைபெற இந்த விதிவிலக்குகள் வகை செய்யும்.

 

இந்திய அரசின் மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின் படி, முழுஅடைப்பு காலத்தின் போது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டியவை பற்றி சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் / துறைகளுக்கும் மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 24, 25, 27 மார்ச் 2020 தேதியிடப்பட்ட அரசாணை எண் 40- 3/ 2020 டி எம் ஐ ஏ மற்றும் இரண்டு நான்கு ஐந்து ஆறு கூடுதல் உட்பிரிவுகள் ஆகியவை மூலம் மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டதற்கிணங்க தேவையான அறிவுரைகள் ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டன.



(Release ID: 1609851) Visitor Counter : 191