சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

DEPwD கோவிட்-19 காரணமாக அவசரகால சூழ்நிலைகளின் போது மாற்று திறனாளிகளின் (Divyangjan) பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான விரிவான வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்துவதற்காக பி.டபிள்யூ.டி யின் மாநில ஆணையர்களுக்கு அறிக்கை

Posted On: 31 MAR 2020 5:08PM by PIB Chennai

மாற்று திறனாளிகளுக்கான மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் ஆணையர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கோவிட்-19 காரணமாக அவசரகால சூழ்நிலைகளின் போது மாற்றுத் திறனாளிகளின் (Divyangjan) பாதுகாப்பிற்காக பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்த DEPwD கடந்த மார்ச் 26ம் தேதி கேட்டுக்கொண்டது. அதன்படி, மாற்று திறனாளிகளை கவனித்துக்கொள்பவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்/PwD’s ஆகியோர்க்கு அனுமதி சீட்டு(Pass) வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

கடிதத்தில், இந்த வழிகாட்டுதல்கள் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய மாநில ஆணையர்கள், மாநில அதிகாரியாக (State Nodal Authority) மாநில / மாவட்ட பேரிடர் மேலாண்மை அதிகாரிகள், சுகாதாரம் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகள் போன்ற அனைத்து தொடர்புடைய அதிகாரிகளுடனும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் தடையுத்தரவு காலத்தில் மாற்றுத்திறனாளிளுக்கு ஏற்படும் இன்னல்கள் குறையும். மேற்கண்ட வழிகாட்டுதல்களின்படி மாநில ஆணையர்கள் தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

*****



(Release ID: 1609849) Visitor Counter : 106