எஃகுத்துறை அமைச்சகம்
கோவிட்-19க்கு எதிரான பொதுசுகாதார நடவடிக்கைகள் குறித்து ஸ்டீல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களுடன் திரு தர்மேந்திர பிரதான் வீடியோ கான்ஃபரன்ஸ்
இடுகை இடப்பட்ட நாள்:
31 MAR 2020 3:26PM by PIB Chennai
கோவிட்-19க்கு எதிரான பொது சுகாதார நடவடிக்கைகள் குறித்து ஸ்டீல் அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் அந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் அதிகாரிகளுடன் மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயு & ஸ்டீல் அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் கானொளிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது ஸ்டீல் அமைச்சகத்தின் இணை அமைச்சர் திரு ஃபக்கான் சிங் குளஸ்தே மற்றும் செயலாளர் (ஸ்டீல்) திரு பினாய் குமார் ஆகியோரும் உடனிருந்தனர். இந்த கூட்டத்தில் கீழ்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டன:
- அரசாங்கம் அறிவுறுத்தியுள்ள சமூக இடைவெளி தொடர்பான விதிகளை அனைத்து மத்திய பொதுத்துறை நிறுவனங்களும் (CPSEs) தங்களது பணி இடங்கள், நகரியங்கள், சுரங்கங்கள் முதலானவற்றில் கடைபிடிக்க வேண்டும்.
- கோவிட்-19 எதிர்ப்பு நடவடிக்கை தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் / அல்லது மாநில அரசுகள் ஆகியவற்றுக்கு ஒப்படைப்பதாக தெரிவித்துள்ள மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் இடவசதிகள் முதலானவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
- SAIL (ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா) தொடங்கியுள்ள சேவைப் புத்தாக்க முறையை மத்திய பொதுத்துறை நிறுவனங்களும் தொடங்கி நடத்தலாம் (அதாவது SAIL ஒரு ஃபோர்ட்டலைத் தொடங்கியுள்ளது. இதில் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சமூக சேவைகளை மேற்கொள்வதற்கு பதிவு செய்து கொள்ள வேண்டும்). மேற்சொன்ன புத்தாக்க நடவடிக்கையின் கீழ் ”அன்னதானம்” (இடம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் சமூகத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு உணவு வழங்குதல்) திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தை மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் உடனடியாக பின்பற்றி இடம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு உதவ வேண்டும்.
(வெளியீட்டு அடையாள எண்: 1609599)
வருகையாளர் எண்ணிக்கை : 126