மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

தேசிய தேர்வு முகமை நடத்தும் பல்வேறு நுழைவு தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 30 MAR 2020 10:50PM by PIB Chennai

கொவிட்-19 பெருந்தொற்றால் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு தேசிய தேர்வு முகமை நடத்தும் பல்வேறு நுழைவு தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி, விரிவாக்கப்பட்ட / திருத்தப்பட்ட தேதிகள் பின்வருமாறு :

எண்

நுழைவுத் தேர்வு

தற்போதய விண்ணப்ப கால அவகாசம்

விரிவாக்கப்பட்ட / திருத்தப்பட்ட தேதிகள் *

முதல்

வரை

முதல்

வரை

01

ஹோட்டல் நிர்வாகத்திற்கான தேசிய கவுன்சில் (என்.சி.எஹ்ச்.எம்) ஜே.இ.இ -2020

01.01.2020

31.03.2020

01.01.2020

30.04.2020

02

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் நுழைவுத்தேர்வு-2020 - பி.எச்.டி. மற்றும் எம்.பி.ஏ விற்கான நுழைவுத் தேர்வு

28.02.2020

23.03.2020

28.02.2020

30.04.2020

03

இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.ஏ.ஆர்)-2020

01.03.2020

31.03.2020

01.03.2020

30.04.2020

04

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (ஜே.என்.யூ.இ.இ)-2020

02.03.2020

31.03.2020

02.03.2020

30.04.2020

05

யுஜிசி-தேசிய தகுதித் தேர்வு (யுஜிசி-நெட்)-ஜூன் 2020

16.03.2020

16.04.2020

16.03.2020

16.05.2020

06

சி.எஸ்.ஐ.ஆர். - தேசிய தகுதித் தேர்வு (சி.எஸ்.ஐ.ஆர்.-நெட்)-ஜூன் 2020

16.03.2020

15.04.2020

16.03.2020

15.05.2020

07

அகில இந்திய ஆயுஷ் முதுகலை நுழைவுத் தேர்வு (ஏ.ஐ.ஏ.பி.ஜி.இ.டி.)-2020

01.04.2020

30.04.2020

01.05.2020

31.05.2020

‘*’ இணையவழி விண்ணப்ப படிவங்கள் மாலை 04.00 மணி வரையும் கட்டணம் இரவு 11.50 மணி வரையும் ஏற்றுக்கொள்ளப்படும்

 

கிரெடிட்/டெபிட் கார்டு/ இணைய வங்கி சேவை/யூ.பி.ஐ. மற்றும் பேடிஎம் மூலம் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தலாம்.

 

நிலைமையை ஆராய்ந்த பின்,  15.04.2020க்குப் பிறகு மட்டுமே அட்மிட் கார்டுகள் பதிவிறக்கம் மற்றும் தேர்வுக்கான திருத்தப்பட்ட தேதிகளைக் குறிப்பிடும் விரிவான அட்டவணை அந்தந்த தேர்விற்கான இணையதளம் மற்றும் www.nta.ac.in என்ற இணையதளத்திலும்  கொடுக்கப்படும்

கூடுதல் தகவல்களுக்கு www.nta.ac.in என்ற இணைய தளத்தைத் தொடர்ந்து பார்வையிடுமாறு விண்ணப்பதாரர்களும் அவர்களது பெற்றோர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு, 8287471852, 8178359845, 9650173668, 9599676953, 8882356803 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

*****


(வெளியீட்டு அடையாள எண்: 1609483) வருகையாளர் எண்ணிக்கை : 132
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Marathi , Bengali , Gujarati , Telugu , Malayalam