வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

சிறப்புப் பொருளாதார மண்டல மேம்பாட்டாளர்கள், இணை மேம்பாட்டாளர்கள், தொழில் பிரிவுகளுக்கு சலுகைகள்

Posted On: 30 MAR 2020 2:52PM by PIB Chennai

கொவிட்-19 தொற்று திடீர் பரவலைத் தொடர்ந்து அமலில் உள்ள நாடு தழுவிய முடக்கத்தால், பல அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. அவசர சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உள்ளிட்டோர்  குறைந்த அளவு பணியாளர்களுடன் இயங்கி வருகின்றது. எனவே, சிறப்புப் பொருளாதார மண்டல தொழில் பிரிவுகள், மேம்பாட்டாளர்கள், இணை மேம்பாட்டாளர்கள் ஆகியோருக்கு விதிமுறைகளின் மீது பொருந்தக்கூடிய சலுகைகளை அளிக்க வர்த்தகத் துறை முடிவெடுத்துள்ளது. இந்த சலுகைகளைப் பெறுவதற்கு  விண்ணப்பிக்க,

  • மேம்பாட்டாளர்கள், இணை மேம்பாட்டாளர்கள் தற்சார்பு பட்டயப் பொறியாளர்களால் சான்றளிக்கப்பட்ட காலாண்டு முன்னேற்ற அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும்
  • தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் தொடர்பான சேவைத் தொழில் பிரிவுகள் தாக்கல் செய்ய வேண்டிய ஏற்றுமதிக்கான சாப்டெக்ஸ் படிவம்
  • சிறப்புப் பொருளாதார மண்டல தொழில் பிரிவுகளால் தாக்கல் செய்யப்படும் வருடாந்திர திறன் அறிக்கைகள்
  • பின்வரும் காரணங்களால் காலாவதியாகக் கூடிய ஒப்புதல் கடித நீட்டிப்பு

மேம்பாட்டாளர்கள், இணை மேம்பாட்டாளர்கள் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை மேம்படுத்தி இயக்கும் நடைமுறையில் ஈடுபடும் போது

நிதி நிறுவனம் அல்லாத நிறுவனத்தின் மதிப்பீட்டுக்கான 5 ஆண்டு தொகுப்பை நிறைவு செய்யக்கூடிய தொழில் பிரிவுகள்

இயங்கத் தொடங்காத தொழில் பிரிவுகள்

தற்போதைய நிலை காரணமாக, மேற்கூறப்பட்டுள்ள விதிமுறைகளில் ஏதாவது ஒன்றைப்  பின்பற்ற இயலாத மேம்பாட்டாளர்கள், இணை மேம்பாட்டாளர்கள், தொழில் பிரிவுகளுக்கு சிரமம் ஏற்படாத வகையிலும்,  தண்டனை நடவடிக்கை எடுக்காமலும் இருக்குமாறு சிறப்பு பொருளாதார மண்டல வளர்ச்சி ஆணையர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இயன்ற வரை, ஒப்புதல் கடித நீட்டிப்பு மற்றும் இதர விதிமுறைகளை மின்னணு முறை மூலம் குறிப்பிட்ட கால வரம்புக்குள் அனுமதிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.



(Release ID: 1609300) Visitor Counter : 173