கலாசாரத்துறை அமைச்சகம்

நவீன கலைகளுக்கான தேசிய கலைக்கூடம், முடக்கநிலை சூழலில் 66வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது

நிரந்தர சேகரிப்பு பொருள்களின் மெய்நிகர் சுற்றுலா (virtual tour) வசதியை முதன்முறையாக நவீன ஓவியத்தின் தேசிய கலைக்காட்சிக் கூடம் (NGMA) தொடங்கியது

Posted On: 30 MAR 2020 1:09PM by PIB Chennai

புதிய கொரோனா வைரஸ் (கோவிட்-2019) பாதிப்பு அச்சுறுத்தலில் இந்தியாவில் 21 நாட்கள் முடக்கநிலை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் நூலகங்கள் மறு உத்தரவு வரும் வரையில் மூடப்பட்டுள்ளன. முன் எப்போதும் இல்லாத இதுபோன்ற சூழ்நிலையில், நவீன கலைகளுக்கான தேசிய கலைக்கூடத்தின் நிரந்தர சேகரிப்புப் பொருள்களை மக்களால் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இப்போதைய சூழ்நிலையில், 66வது நிறுவன தினத்தை (29.03.2020) ஒட்டி, நிரந்தர சேகரிப்புப் பொருள்களின் மெய்நிகர் சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முடக்கநிலை நாட்களில் கேலரி வளாகத்துக்கு நேரில் வராமல், வீட்டில் இருந்தபடியே இவற்றைக் காண்பதற்கான வசதி தொடங்கப்பட்டுள்ளது. முடக்கநிலை காலக்கட்டத்தில், முதன்முறையாக இந்த வசதியை நவீன ஓவியத்தின் தேசிய  கலைக்காட்சிக் கூடம் ( NGMA) தொடங்கியுள்ளது.  துடிப்பான மற்றும் ஆக்கபூர்வமான சேகரிப்புகளின் களஞ்சியமாக இந்த வளாகம் உள்ளது என்பதை இதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம் என்று கலைக்கூடத்தின் தலைமை இயக்குநர் திரு. அத்வைதா கடநாயக் கூறினார். இந்த இணையத் தொடர்பு சுட்டியில் பார்த்து, அறிந்து கொள்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.

மெய்நிகர் சுற்றுலாவுக்கான இணையத் தொடர்பு சுட்டி கீழே தரப்பட்டுள்ளது.

http://www.ngmaindia.gov.in/index.asp

 

*****


(Release ID: 1609251)