உள்துறை அமைச்சகம்
பிரதமரின் அறிவுறுத்தலின் படி, இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது முடக்கத்தின் போது அனைத்து ஆதரவையும் அளிக்க அரசு உறுதி பூண்டுள்ளது: திரு. அமித் ஷா
தங்களது மாநிலங்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நெடுஞ்சாலைகளில் நிவாரண முகாம்களை அமைத்து உணவு, உறைவிடம் அளிக்க மாநில அரசுகளுக்கு அறிவுரை
கோவிட் 19 பொது முடக்கத்தின் போது, இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளுக்காக மாநில பேரிடர் மேலாண்மை நிதியை மாநில அரசுகள் பயன்படுத்திக் கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல்
प्रविष्टि तिथि:
28 MAR 2020 5:37PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடியின் அறிவுறுத்தல்களின் படி, இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பொது முடக்கத்தின் போது அனைத்து ஆதரவையும் அளிக்க அரசு உறுதி பூண்டுள்ளதாக, கோவிட் 19 பரவலைத் தடுக்க இன்று நாட்டின் தயார் நிலையை ஆய்வு செய்த மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா தெரிவித்தார்.
இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அனைத்து சாத்தியமான உதவிகளையும் அளிக்க மோடி அரசு உறுதியாக உள்ளதால், தற்போதைய பொது முடக்கத்தின் போது தங்களது மாநிலங்களுக்கு திரும்பிக் கொண்டிருக்கும் அல்லது திரும்ப உத்தேசித்துள்ள இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் / யாத்ரீகர்கள் போன்றவர்களுக்காக நிவாரண முகாம்களை அமைக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை செயலாளர் மீண்டும் ஒரு முறை கடிதம் எழுதியுள்ளார்.
கீழ்கண்டவற்றை ஒலி பெருக்கிகள், தொழில்நுட்பம், தன்னார்வலர்கள் மற்றும் அமைப்பு சாரா நிறுவனங்களின் சேவையை பயன்படுத்தி விரிவான விளம்பரம் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
(i) நிவாரண முகாம்களின் இருப்பிடம் மற்றும் அங்கு கிடைக்கும் வசதிகள்.
(ii) பிரதான் மந்திரி பிரதமரின் ஏழைகள் மறுவாழ்வு திட்டத்தின் (கரிப் கல்யாண் யோஜ்னா) கீழ் உள்ள நிவாரணத் தொகுப்பு மற்றும் மாநில அரசு நிர்வாகம் எடுத்துவரும் நடவடிக்கைகள்.
நெடுஞ்சாலைகளில் சென்று கொண்டிருக்கும் மக்களுக்காக, கொட்டகை தங்குமிடங்களுடன் கூடிய நிவாரண முகாம்களை நெடுஞ்சாலைகளில் அமைக்குமாறும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன. இவைகளில், பொது முடக்கம் அமலில் இருக்கும் வரை மக்கள் இங்கு தங்கலாம். மக்கள் ஒவ்வருக்கிடையே இடைவெளி (சோசியல் டிஸ்டன்சிங்), தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவ மனையில் சேர்த்தல் தேவைப்படுவோரை அடையாளப்படுத்த போதுமான மருத்துவ பரிசோதனை முகாம்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த தங்குமிடங்கள் அமைக்கப்பட வேண்டும்.
இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான நிவாரண நடவடிக்கைகளுக்காக மாநில பேரிடர் மேலாண்மை நிதியை மாநில அரசுகள் பயன்படுத்திக் கொள்ள மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இது, மேற்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், கையாள்வதற்கும் மாநில அரசுகளுக்கு இன்னுமை வலிமை சேர்க்கும்.
(रिलीज़ आईडी: 1608928)
आगंतुक पटल : 325