பிரதமர் அலுவலகம்

`அவசர சூழ்நிலைக்கான பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண நிதிக்கு (PM CARES நிதி)' தாராளமாக நன்கொடை அளிக்க வேண்டுகோள்

Posted On: 28 MAR 2020 4:36PM by PIB Chennai

கோவிட் - 19 நோய்த் தொற்று உலகையே உலுக்கியதுடன், கோடிக்கணக்கான மக்களுக்கு ஆரோக்கிய மற்றும் பொருளாதாரப் பாதுகாப்புக்கு தீவிர சவால்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலும், கொரோனா வைரஸ் பரவுதல் அச்சமூட்டும் வகையில் உள்ளது. சுகாதார மற்றும் பொருளாதார சவால்களையும் பெரிய அளவில் ஏற்படுத்தியுள்ளது. இந்த அவசர நேரத்தில் அரசுக்கு ஆதரவாக இருப்பதற்கு தாராளமாக நிதியுதவிகள் அளிப்பதற்கு பிரதமரின் அலுவலகத்திற்கு தாங்களாக முன்வந்து எண்ணற்ற நபர்கள் தகவல்கள் கேட்கின்றனர்.

துன்பான சூழ்நிலைகள், இயற்கையாக நிகழ்ந்தாலோ அல்லது வேறு விதங்களில் ஏற்பட்டாலோ, பாதிக்கப்பட்ட மக்களை துன்பத்தில் இருந்து விரைவில் மீட்கவும், கட்டமைப்பு மற்றும் திறன்களுக்கு ஏற்பட்ட சேதத்தைக் குறைத்தல் / கட்டுப்படுத்தலுக்கு துரிதமான மற்றும் கூட்டு நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. எனவே, துரிதமான அவசரகால செயல்பாட்டுக்கு ஏற்ப திறன்களை கட்டமைத்துக் கொள்வது மற்றும் சமுதாயம் அதைத் தாங்குவதற்கான சூழ்நிலையை உருவாக்குவது ஆகியவை கட்டமைப்பு மற்றும் நிறுவனம் சார்ந்த திறன் மீட்டுருவாக்கம் / மேம்படுத்தலுடன் இணைந்து மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் உள்ளது. இது போன்ற உறுதியான செயல்பாட்டுக்கு, புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் முன்கூட்டியே அறியும் வகையிலான ஆராய்ச்சிகள் ஆகியவை தேவைப்படுகின்றன.

கோவிட் 19 நோய்த் தொற்று போன்ற, எந்த வகையான அவசர சூழ்நிலை அல்லது துன்பகரமான சூழ்நிலையையும் கையாள்வதற்குப் பயன்படுத்துவது மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பது என்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டு, `அவசர சூழ்நிலைகளுக்கான பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் நிவாரண நிதி (PM CARES நிதி)' என்ற பெயரில் பப்ளிக் சாரிட்டபிள் ட்ரஸ்ட் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக பிரதமர் இருப்பார். பாதுகாப்புத் துறை, உள்துறை மற்றும் நிதித் துறை அமைச்சர்கள் இதன் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

எந்தப் பிரச்சினையையும் தணிப்பதற்கு மக்கள் பங்கேற்பு தான் சிறந்த வழியாக இருக்கும் என்பதில் பிரதமர் திரு. நரேந்திர மோடி மிகுந்த நம்பிக்கை கொண்டவராக இருக்கிறார். அதை செயலிலும் காட்டியிருக்கிறார். அந்த வகையில் இது மற்றுமொரு உதாரணமாக இருக்கும். இதில் சிறு அளவிலான நன்கொடைகளும் அளிக்க முடியும். எனவே மிகக் குறைந்த பங்களிப்புடன் பெருமளவிலான மக்கள் இதில் பங்கேற்றுக் கொள்ள முடியும்.

குடிமக்களும், அமைப்புகளும்  pmindia.gov.in இணையதளத்திற்குச் சென்று பின்வரும் தகவல்களைப் பயன்படுத்தி PM CARES நிதிக்கு நன்கொடை அளிக்க முடியும்:

கணக்கின் பெயர்     PM CARES

கணக்கு எண்        2121PM20202

IFSC Code            : SBIN0000691

SWIFT Code                   : SBININBB104                                                                         

வங்கி & கிளை பெயர் : State Bank of India, New Delhi Main Branch

UPI ID                      : pmcares@sbi

 

pmindia.gov.in  இணையதளத்தில் பின்வரும் முறையிலான பண மாற்றங்களுக்கும் வசதி இருக்கிறது

1.         டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள்

2.         இன்டர்நெட் வங்கிச் சேவை

3.         UPI (BHIM, PhonePe, Amazon Pay, Google Pay, PayTM, Mobikwik, போன்றவை.)

4.         RTGS/NEFT

 

இந்த நிதிக்கான நன்கொடைகளுக்கு பிரிவு 80 (G)-யின் கீழ் வருமான வரியில் இருந்து விலக்கு உண்டு.

******


(Release ID: 1608888) Visitor Counter : 368