புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்

பொது முடக்கத்தின் காரணமாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்கு நீட்டிப்பு வழங்கப்படுகிறது

Posted On: 26 MAR 2020 12:04PM by PIB Chennai

பொது முடக்கத்தையும் (லாக் டவுன்), தொழிலாளர்களை மீண்டும் ஒன்று கூட்டுவதற்குத் தேவைப்படும் காலத்தையும் கருத்தில் கொண்டு, செயல்படுத்துதலில் உள்ள அனைத்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்படும் என புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் திரு. ஆனந்த் குமார் சுட்டுரை (Tweet) ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

'கொரொனா வைரஸ் பரவல் இணைப்புச் சங்கிலியை தகர்ப்பதற்கு மிக அவசியம்' என்று உறுதிபடக் கருதி நாடெங்கிலும் கடந்த செவ்வாய்க்கிழமை  இரவு முதல் முழு முடக்கத்தை பாரதப் பிரதமர் அறிவித்தார். கொரொனா வைரஸின் பரவல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களில் பயன்படுத்தப்படும் பொருள்களின் விநியோகச் சங்கிலியை சீர்குலைத்ததோடு மட்டுமில்லாமல், தொழிலாளர்கள் கிடைப்பதையும் பாதித்துள்ளது. இந்த நிலையில், கால நீட்டிப்புக்கான இந்த அறிவிப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் உள்ள அனைவருக்கும் பெரிய நிவாரணத்தை அளிக்கும்.


(Release ID: 1608390) Visitor Counter : 226