பிரதமர் அலுவலகம்

ரஷ்ய கூட்டமைப்பின் அதிபருடன் பிரதமரின் தொலைபேசி உரையாடல்

प्रविष्टि तिथि: 25 MAR 2020 10:54PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று ரஷ்ய கூட்டமைப்பின் அதிபர் மாண்புமிகு திரு. விளாடிமிர் வி புடின்-உடன்  தொலைபேசியில் கலந்துரையாடினார். இரு தலைவர்களும் கோவிட்-19 பெரும் தொற்று நோயினால் உலகெங்கிலும் நிலவி வரும் சூழ்நிலை குறித்து விவாதித்தனர்.

கொரோனா வைரஸ் நோயினால் ரஷ்யாவில் பாதிக்கப்பட்டுள்ளோர் விரைவில் குணமாக தனது வாழ்த்துகளை தெரிவித்த பிரதமர், இந்த நோய்க்கு எதிராக அதிபர் புடினின் தலைமையில் ரஷ்யா எடுத்து வரும் நடவடிக்கைகள் வெற்றி பெறும் என்று நம்பிக்கையும் தெரிவித்தார்.

இந்தியாவில் கொவிட்-19க்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் வெற்றி பெற பிரதமரிடம் தனது வாழ்த்துகளை அதிபர் புடின்,  தெரிவித்தார்.

சுகாதாரம், மருத்துவம், அறிவியல் ஆராய்ச்சி, மனிதாபிமான முயற்சிகள் மற்றும் உலக பொருளாதாரத்தின் மீதான தாக்கம் உள்ளிட்ட‌வற்றில் இந்த மிகப்பெரிய சர்வதேச நெருக்கடி உருவாக்கியுள்ள அனைத்து சவால்களையும் எதிர்கொள்வதற்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் நடவடிக்கைகளை மேலும்  மேற்கொள்ள இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.  கொவிட்-19 தொற்றை எதிர்த்து சர்வதேச ஒத்துழைப்புடன் ஜி20 வரைவுச் சட்டகத்துக்கு உட்பட்டு ஒன்றிணைந்து போராடுவதன் அவசியத்தை இருவரும் வலியுறுத்தினர்.  

ரஷ்யாவில் உள்ள இந்திய மாணவர்களின் நலனுக்காக‌ ரஷ்ய அதிகாரிகள் அளித்த ஒத்துழைப்புக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர், இது தொடரவேண்டும் என்ற தன் நம்பிக்கையும் தெரிவித்தார். அதிபர் புடின் இது தொடர்பாக அனைத்து உதவிகளையும் அளிப்பதாக உறுதி கூறினார். இந்தியாவில் உள்ள ரஷ்ய மக்களின் நலனுக்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்திய அதிகாரிகள் தொடர்ந்து எடுத்து வருவார்கள் என்றும் அவர்கள் தேவைப்படும் போது பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கும் உதவுவார்கள் என்றும் அதிபர் புடினிடம் பிரதமர் தெரிவித்தார்.

காலம் காலமாக இரு நாடுகளுக்கிடையே இருந்து வரும் நல்லுறவு தொடரவும், தங்களுக்கிடையேயான சிறப்பான புரிதலும் ஒருங்கிணைப்பும் தொடரவும் இரு தலைவர்களும் உறுதியேற்றனர். இந்த ஆண்டில் தங்கள் இருவருக்கிடையே நேரடி தொடர்புகளுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் இரு தலைவர்களும் நம்பிக்கை தெரிவித்தனர்.

 

****


(रिलीज़ आईडी: 1608336) आगंतुक पटल : 199
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Kannada , Malayalam